தேன் துளி -jabir hashim

வாழ்வு வளம் பெற திருமறையின் ஒளியில் நம் பாதை சுடர் வீசி மிளிரட்டும்

இமாம் முஸ்லிம் (றஹ்) அவர்களின் ஹதீஸ் ஆர்வம்

இமாம் முஸ்லிம் (றஹ்) அவர்களின் ஹதீஸ் ஆர்வம்


அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலில் முப்பது வருடங்களாக ஓதப்பட்டு வரும் ஸஹீஹுல் முஸ்லிம் இம்முறையும் ஓதப்படுகின்றது. முஹர்ரம் தலைப்பிறை யன்று தொடங்கி முப்பது நாட்கள் வரை ஓதப்பட்டு கந்தூரி வைபவத்துடன் இந்நிகழ்வு தமாம் செய்யப்படும்.
மிகச் சிறந்த மார்க்க விற்பன்னர்களால் சுபஹ் தொழுகையின் பின்னர் ஓதப்பட்ட ஹதீஸ்களின் விளக்கம் மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் பாராயணம் செய்யப்படவுள்ளது.
ஸஹீஹுல் ஸித்தாவான ஆறு முக்கிய ஹதீஸ் கிரந்தங்களில் புஹாரி நூல் பெரிய பள்ளிவாசலிலும், முஸ்லிம் நூல் பட்டினப்பள்ளிவாசலிலும், திர்மிதி நூல் புதுப்பள்ளி வாசலிலும் ஓதப்படுகின்றது. புஹாரி, முஸ்லிம் ஆகிய நூல்களை ஸஹீஹைன் என்று அழைப்பர். இக்கிரந்தங்களிலுள்ள ஒரே ஸஹாபியால் அறிவிக்கப்பட்ட ஹதீதுகள் ‘முத்தபகுன் அலைஹி’ என்று அழைக்கப்படுகிறது.
முஸ்லிம் என்ற ஹதீஸ்களை தொகுத்த இமாமின் பெயர் இமாம் முஸ்லிம் (றஹ்) என்பதாகும். இவர் ஹிஜ்ரி 206ல் நைஸாபூரில் பிறந்தார். ஞாபகசக்தியில் விற்பனரான இமாம் முஸ்லிம் (றஹ்) மூன்று இலட்சம் ஹதீதுகளைத் திரட்டினார்கள். இதில் ஏழாயிரம் ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் நான்காயிரம் ஹதீஸ்களை ஸஹீஹுல் முஸ்லிம் என்ற நூலில் தொகுத்தார்கள்.
ஹதீதுகளின் பொற்காலமான தபஉத்தாபிஈன்களின் காலத்தில் வாழ்ந்த முஹத்திஸின்கள் நபியவர்களின் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். சரியானதும், தெளிவானதும், உறுதியானதுமான ஹதிஸ்களைத் தேடித்திரட்டும் பொருட்டு இமாம் முஸ்லிம் (றஹ்) அவர்கள் ஆயிரக்கணக்கான கி.மீற்றர் தூரம் பயணம் செய்தார்.
இந்தப் பணியில் களங்கம் ஏற்படாது என்பதில் கவனமாக இருந்த இமாம் முஸ்லிம் ஹதீஸ்களை அறிவிப்புச் செய்த ஸஹாபாக்களின் வாழ்க்கை. அவர்களின் நம்பகத்தன்மை நபியவர்களின் காலத்தில் அவர்களுக்கிருந்த செல்வாக்கு என்பவற்றையும் கருத்தில் கொண்டார்கள். ஒரு ஸஹாபியின் அறிவிப்புக்கும், மற்றொரு ஸஹாபியின் அறிவிப்புக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தால் அந்த ஹதீஸைக் கைவிடுவார்கள்.
சமூக, அரசியல், பொருளாரா, குடும்பம், ஆன்மீகம், சட்டம் அனைத்தையும் இமாம் முஸ்லிம் அவரது ஹஹீஹுல் முஸ்லிம் என்ற நூலில் தொகுத்துள்ளார். இளமைக்காலத்தில் ஹதீஸ் கலையில் ஆர்வம் கொண்டிருந்த இமாம் முஸ்லிம் அக்காலத்தைய சிறந்த அறிஞர்களான இஸ்ஹாக் இப்னு றாஹியா, முஹம்மது இப்னு எஹ்யா, அஹ்மது இப்னு ஹன்பல், இமாம் புஹாரி ஆகியோரிடமிருந்து ஹதீஸ்கலையை கற்றுக் கொண்டார்கள். இமாம் முஸ்லிம் 18 நூல்களை எழுதியுள் ளார்கள். இவை அனைத்தும் ஸஹீஹ் முஸ்லிம் நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல்களாகும்.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply