தேன் துளி -jabir hashim

வாழ்வு வளம் பெற திருமறையின் ஒளியில் நம் பாதை சுடர் வீசி மிளிரட்டும்

கண்ணையும் கண் பார்வையையும் தந்த அல்லாஹ்வை

கண்ணையும் கண் பார்வையையும் தந்த அல்லாஹ்வை

கண்ணையும் கண் பார்வையையும் தந்த அல்லாஹ்வை கண் விழித்திருக்கும் நேரமெல்லாம் புகழ வேண்டும். வாயால் மட்டுமல்ல… கண்களாலேயே அந்த அருளுக்கான காணிக்கைகளை நாம் செலுத்த வேண்டும்.
விண்ணிலும் மண்ணிலும் இருக்கின்ற அற்புதங்களையும் அரிய பல காட்சிகளையும் இயற்கையின் ஆர்ப்பரிப்புகளையும் கண்டுகளிப்பதற்கு இந்தப் பார்வை கிடைத்திருக்காவிட்டால் உலகம் இருந்தென்ன பயன்? இருள் மண்டிக் கிடக்கும் ஒரு குகைக்கும் இந்த உலகிற்கும் அப்போது என்ன வித்தியாசம்?!
இருப்பினும் கண்களைத் தந்தவனை கண்ணிமைக்கும் நேரமாவது நினைத்துப் பார்க்காதவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் குருடாகி விட்டார்களா? அவர்களுக்கு நடந்த கதியை அல்குர்ஆனின் 22: 46 ஆவது வசனம் மிகவும் வேதனைதோடு இப்படி எடுத்தியம்புகிறது.
அவர்கள் பூமியில் சென்று (அதிசயமான அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பார்த்து) வர வேண்டாமா? அவ்வாறாயின் சிந்தித்துணரும் இதயங்கள் அவர்களிடம் இருக்க முடியும். செவிமடுக்கும் காதுகளும் (அவர்களிடம்) இருக்க முடியும். நிச்சயமாக பார்வைகள் குருடாவதில்லை. நெஞ்சுக்குள் இருக்கும் (உணர்வற்ற) இதயங்களே குருடாகின்றன.
ஆம், மனிதர்களைப் பொறுத்தவரை குருடாவது பார்வைகளல்ல, பார்த்தவற்றிலிருந்து படிப்பினை பெறாத உள்ளங்களே…

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply