தேன் துளி -jabir hashim

வாழ்வு வளம் பெற திருமறையின் ஒளியில் நம் பாதை சுடர் வீசி மிளிரட்டும்

நோயாளியை நலம் விசாரிக்கும் போது

நோயாளியை நலம் விசாரிக்கும் போது

நோயாளியை நலம் விசாரிப்பது ஒரு முஸ்லிமுக்கு மற்ற முஸ்லிம் சகோதரர் மீது மார்க்க ரீதியான உரிமையாகும். நோயாளியின் நலம் விசாரித்தல், அவருடைய துக்கத்தில் பங்கு கொள்ளுதல், அவருக்கு உதவு தல் ஆகியவை குறித்து அலட்சியமாக இருப்பது இறைவன் குறித்து அலட்சியமாக இருப்பது போன்றாகும்.

ஆயிஷா பின்த் ஸஅத் (ரலி) கூறினார்கள், “என்னுடைய தந்தை என்னிடம் கூறினார். மக்காவில் நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன் நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிப்பதற்காக வந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “யாரஸ¤லுல்லாஹ்! நான் போதுமான அளவு சொத்துக்கள் வைத்திருக்கிறேன். எனக்கு ஒரேயொரு மகள் மட்டுமே (வாரிசாக இருக்கிறாள்.

எனவே என் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை நான் மரண சாஸனம் எழுதிவைத்து விட்டு மீதியுள்ள ஒரு பகுதியை பெண்களுக்காக விட்டுச் செல்லலாமா)” அதற்கு நபி (ஸல்) ‘கூடாது என்று கூறினார்கள். பின்னர் நான் கேட்டேன். “அவற்றில் பாதியை மரண சாஸனம் எழுதி விட்டு பாதியை பெண்ணுக்கு எழுதி வைக்கலாமா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் “கூடாது” என்று கூறினார்கள். பின்னர் நான் “மூன்றில் ஒரு பகுதியை எழுதட்டுமா”” என்று கேட்டதற்கு, “ஆமாம்! மூன்றில் ஒரு பகுதியை மரண சாஸனம் செய்யலாம்.

ஆனால் அதுவும் அதிகம்தான் என்று (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் தம்முடைய கையை என்னுடைய நெற்றியின் மீது வைத்து என்னுடைய முகம் மற்றும் முதுகுப் பகுதியை தடவிக்கொடுத்தார்கள். பின்னர் யாஅல்லாஹ் ! ஸஅதிற்கு நலம் தருவாயாக! இவருடைய ஹிஜ்ரத்தை முழுமையானதாக ஆக்குவாயாக! என்று எனக்காகப் பிரார்த்தித்தார்கள். அன்று முதல் எப்போதேனும் எனக்கு அந்த நாள் ஞாபகம் வருமானால், (ஸல்) அவருடைய கைபட்டதால் என்னுடைய இதயத்தில் ஒரு குளிச்சி இருப்பது போன்று உணர்வேன். ஆதாரம் : அல்அதபுல் முஃபரத்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply