Category Archives: SINHALA

வெசாக் (தன்சல்) உணவும், இலங்கை முஸ்லிம்கள் நிலையும்

இலங்கை நாட்டின் பௌத்தர்கள் உட்பட உலகில் உள்ள பௌத்தர்கள் அனைவரும் இன்று  மற்றும் நாளை மறுநாள் (24, 25) ஆகிய இரு நாட்கள் “வெசாக்” தினத்தை கொண்டாடுகின்றார்கள்.வெசாக் தின கொண்டாட்டத்தின் போது பலவிதமான களியாட்ட நிகழ்ச்சிகளையும் பௌத்தர்கள் நடாத்துவார்கள். இதில் ஒரு கட்டமாக உணவுகளையும் பரிமாறுவார்கள் இதற்கு “தன்சல” என்று பெயர் சொல்லப்படும்.“தன்சல” உணவுகளைப் பொருத்தவரையில் சில நேரங்களில் சாப்பாடு சமைத்தும், இன்னும் சில நேரங்களில் பானங்கள் செய்தும் பரிமாறுவார்கள்.இந்த உணவுப் பொருட்களை முஸ்லிம்கள் சாப்பிடலாமா? கூடாதா? என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

“வெசாக்” கொண்டாட்டத்திற்கான காரணம்.“வெசாக்” என்ற பெயரில் பௌத்தர்கள் இந்த இரண்டு நாட்களையும் புனிதமாக கருதுவதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றது.இதனை விக்கிபீடியா கலைக் கலஞ்சியம் இவ்வாறு விபரிக்கின்றது.வெசாக் (இலங்கையில்) அல்லது புத்த பூர்ணிமா (இந்தியாவில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.1. சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.2. புத்தர் புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.3. புத்தர் இறந்த நாள்.இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.புத்தர் பிறந்த தினம், புத்தர் புத்த நிலை அடைந்த தினம், புத்தர் இறந்த தினம் ஆகிய மூன்று நிகழ்வுகளுக்காக “வெசாக்” தினத்தை பௌத்தர் கொண்டாடுகின்றார்கள் என்ற கருத்தில் சில மாற்றுக் கருத்துக்களும் நிகழ்கின்றன. அதாவது “வெசாக்” தினம் புத்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாத்திரம் தான் கொண்டாடப்படுகின்றது என்ற பொதுவான கருத்தும் பேசப்படுகின்றது.எது எப்படியோ இந்த மூன்று காரணங்கள் தான் “வெசாக்” தின கொண்டாட்டம் தொடர்பாக சொல்லப்படுகின்றன.வெசாக் (தன்சல) உணவை முஸ்லிம்கள் சாப்பிடலாமா?வெசாக் (தன்சல) உணவை சாப்பிடுவதைப் பொருத்த வரையில் இரண்டு கோணங்களில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.வெசாக் (தன்சல) உணவைப் பொருத்தவரையில் பெரும்பாலும் புத்த பெருமானுக்குப் படையல் செய்வார்கள். அப்படி படைக்கப்பட்ட உணவாக இருந்தால் அதனை சாப்பிடுவது தெளிவான ஹராமாகும்.ஆனால் சில இடங்களில் புத்தருக்குப் படையல் செய்யாமலும் அந்த உணவை மற்றவர்களுக்கு பகிருவார்கள். உதாரணமாக ஒரு கம்பணி அல்லது பிரபல்யமான ஒருவர் கொடுக்கும் வெசாக் (தன்சல) உணவாக இருந்தால் இதில் பெரும்பாலும் (பிரித்) ஓதி படையல் செய்யும் காரியங்கள் நடப்பதில்லை. குறிப்பிட்ட பிரபல்யமான நபர் ரிபன் வெட்டி திறந்துவிடுவார் அத்தோடு சாப்பாடு பகிர ஆரம்பித்து விடுவார்கள்.இந்த உணவை பொருத்த வரையில் இது படையல் செய்யப்பட்ட உணவல்ல. இருப்பினும் புத்தரின் பிறந்த நாளுக்காக செய்யப்பட்ட உணவு அதாவது பிறந்த நாள் உணவு.இதே நேரம் வெசாக் (தன்சல) கொண்டாட்டத்திற்கு புத்தரின் இறப்பும் காரணம் என்று பொளத்தர்கள் நம்புகின்றார்கள். ஆகவே தன்சல உணவு புத்தரின் இறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும் சேர்த்தே சமைக்கப்படுகின்றது. புத்தரின் இறந்த நாளுக்காக செய்யப்படும் உணவு என்று வரும் போது அது கத்தத்திற்கு சமைக்கப்பட்ட உணவாகிவிடும்.எது எப்படியோ படைக்கப்படாவிட்டாலும் இறந்த நாளுக்காகவும் பௌத்தர்கள் இதனை கொண்டாடுவதினால், அதற்காக சமையல் செய்வதினால் வெசாக் (தன்சல) சாப்பாட்டை சாப்பிடுவது ஹராம் என்றாகிவிடும்.தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான்.யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:115)அறுக்கப்பட்டவை என்று மொழிபெய

தன்சல உணவுக்கு பணம் கொடுக்கலாமா?மத நல்லிணக்கம் என்ற பெயரில் தன்சல சாப்பாட்டுக்கு முஸ்லிம்கள் பணம் கொடுக்கும் வழக்கம் நம் மத்தியில் காணப்படுகின்றது.தன்சல சாப்பாடு என்பது மார்க்க ரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும் போது அதற்கு நமது செல்வத்தின் மூலம் உதவுவது என்பது பாவத்திற்கு துணை போவது மாத்திரமன்றி வரம்ப மீறலுமாகும்.பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)மேற்கண்ட வசனத்தில் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும் உதவக் கூடாது என்று இறைவன் தெளிவாக குறிப்பிடுகின்றான். ஆகவே தன்சல சாப்பாட்டுக்கு நாம் பணம் கொடுப்பது தெளிவாக பாவத்திற்கு துணை போகும் காரியமாகும்.வெசாக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கலாமா?வெசாக் தினத்தில் பலவிதமான களியாட்டங்களும், கொண்டாட்டங்களும் நடாத்தப்படும் இவற்றிலும் ஒரு முஸ்லிம் பங்கெடுக்கக் கூடாது. பௌத்த மக்கள் வணங்கக் கூடிய கற்பனைக் கடவுளின் நினைவாக நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளில் அதிலும் குறிப்பாக அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும் நிகழ்ச்சிகளில் எந்த முஸ்லிமும் பங்கெடுக்கலாகாது.……நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)மேற்கண்ட திருமறை வசனம் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும் துணை போகக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது. வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதென்பது பாவம் மாத்திரமல்ல வரம்பு மீறலும் ஆகும்.வெசாக் கூடு தொங்கவிடுவது கூடாது.பெரும்பாலான முஸ்லிம்கள் வெசாக் கூடு செய்து தமது வீடு மற்றும் வியாபாரா நிலையங்களிலும் தொங்கவிடுகின்றார்கள். தமது பிள்ளைகளுக்கும் இதில் ஆர்வமூட்டுகின்றனர். தமது பிள்ளைகளை வெசாக்கூடு செய்யும் போட்டிகளிலும் பங்கு பற்ற வைத்து பரிசில்களையும் பெற்று பெருமிதம் அடைகின்றனர். வெசாக் கூடு என்பது மற்ற மதத்தவர்களின் மதத்தை பிரதிபளிக்கின்ற ஒன்றாகும். மற்ற மதத்தவர்களின் மத கிரியைகளை நாம் செய்தால் நாமும் அவர்களைப் போல் ஆகிவிடுவோம் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகின்றது.யார் மற்றொரு சமூகத்திற்கு (மதத்தினருக்கு) ஒப்பாகிறாரோ அவரும் அவரைச் சார்ந்தவரே. (அபூதாவூத்)மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் எக்காரணம் கொண்டும் வெசாக் கூடு செய்வதோ, தொங்கவிடுவதோ, வெசாக் தின போட்டிகளில் பங்கெடுப்பதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஹராமான காரியங்களாகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.வெசாக் கூடு வியாபாரம் மற்றும் வெசாக் தினத்தில் பன்சலைகளில் வியாபாரம் செய்வது போன்றவை கூடுமா?

விஸா சிபாரிசுகளை ஜம்இயதுல் உலமா மூலம் வழங்கினால் சிறப்பாக இருக்கும்

வெளிநாடுகளில் இருந்து வரும் இஸ்லாமிய பிரச்சரர்களுக்கு விஸா ஒழுங்குகளுக்கான சிபாரிசுகளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா ஊடாக மேற்கொண்டாள் சிறப்பாக இருக்கும் என அதன் செயலாளர் முபாரக் மௌலவி தெரிவித்துள்ளார் .அண்மையில் ஏற்பட்ட விஸா ஒழுங்கு பிரச்சினை அனைத்து இஸ்லாமிய பிரச்சரர்களுக்குமான பொதுவான பிரச்சினையாகும்.

தப்லீக் அழைப்புப் பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரியமை முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது ஏனென்றால் இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபடும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளுக்கும் இந்த பிரச்சினை ஏற்படலாம் என்ற காரணம்தான் .

தப்லீக் அழைப்புப் பணியாளர்கள் அமைதியான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் . நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரியதுடன் அவர்கள் அமைதியாக வெளியேறிவிட்டார்கள். நாட்டின் சட்டங்களை அவர்கள் மீறவில்லை . இலங்கையில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி ,தௌஹீத் ஜமாஅத் ஆகியவற்றுக்கு ஜம்இயதுல் உலமா அனுமதி வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .

அதேவேளை ஜம்இயதுல் ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி சஹீத் கொள்கை வேறுபாடுகள் காணப்பட்டாலும் தப்லீக் பிரச்சார பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை முஸ்லிம்களுக்கான பொதுவான பிரச்சினையாகும் .அனைத்து முஸ்லிம் பிரச்சாரர்களையும் இது பாதிக்கும்.

நாட்டில் சட்டங்களை மீறாது இஸ்லாமிய அழைப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சகலருக்கும் சந்தர்ப்பங்களை வழங்குவது அரசின் கடமையாகும் .இதற்கு பொருத்தமான விஸா ஒழுங்கு முறைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இஸ்லாமிய அழைப்பு பணியாளர்களும் அரசின் விதிமுறைகளை துஸ்பிரயோகம் செய்யாது நடந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .

புத்தபகவானின் இலங்கை வருகை: 2600 வருட பூர்த்தி விழா


நேற்று மஹியங்கனை வைபவத்தில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
புத்தபகவான் இலங்கைக்கு வருகை தந்த 2600 வருட நிறைவு தின நிகழ்வுகள் மற்றும் புத்த பகவானின் புனித கேஷம் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மஹியங்கனை ரஜமகா விஹாரையில் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் மஹியங்கனைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹியங்கனை ரஜமகா விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் நேற்றுக்காலை புத்த பகவானின் புனித கேஷத்தை மக்கள் தரிசனத்துக்காக காட்சிப்படுத்தும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். புனித கேஷம் பங்களாதேஷின் சித்த கொங் பெளத்த விஹாரையிலிருந்து இலங்கைக்கு எடுத்தவரப்பட்டது. நேற்றைய தினம் புத்த பகவானின் இலங்கை வருகையைக் குறிக்கும் வகையில் இப்புனித கேஷம் மக்கள் தரிசனத்துக்காகக் காட்சிப்படுத்தப்பட்டது.

புத்த பகவான் இலங்கை வருகையின் போது மஹியங்கனை ரஜமகா விஹாரைக்கே விஜயம் செய்துள்ளார். அதனைக் குறிக்கும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மஹியங்கனையில் நடைபெறவுள்ளன.

இதனையொட்டி மஹியங்கனை நகரம் மற்றும் அதனையொட்டிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்டிருந்ததுடன் இலட்சக்கணக்கில் திரண்டு வரும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொது வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 2600 வருட புத்த ஜயந்தியையொட்டி நேற்றைய தினம் ரஜமகா விஹாரையில் விசேட ஞாபகார்த்த முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வுகளில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள், பெளத்த மதத் தலைவர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் இன்றைய தினம் பிரதமர் டி.எம். ஜயரட்ண அங்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.