Category Archives: SRI LANKA

சிந்தனை யுத்தத்தில் செத்துக் கொண்டிருக்கிறோம்

றைநம்பிக்கையாளர்கள் நன்மைகள் செய்ய விரைகின்றனர், முன்னேறிச் செல்கின்றனர். (அல்குர்ஆன் 23:60-61)

கருணை மிக்க இறைவன் மனித குலத்திற்காக என்னிலடங்கா அருட்;கொடைகளை வழங்கியுள்ளான்.
பிள்ளைச் செல்வம், பொருட்செல்வம், பட்டம்-பதவி, நோயற்ற வாழ்க்கை, நகைநட்டுகள், வாகனங்கள் இப்படி ஏராளமான அருட்கொடைகளை இறைவன் வழங்கியுள்ள போதும் அவ்வருட்கொடைகளில் எல்லாம் மிகப் பெரிய அருட்கொடை, விலைமதிப்பற்ற ஒரு செல்வம் தீன். அதாவது இஸ்லாம்.
இத்தீனை நமக்கு வழங்கியுள்ளதால்தான் நாம் முஸ்லிம்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த தீனை நிலை நாட்ட ஒரு சமுதாயத்தை புனர்நிர்மாணம் செய்ய ஒரு சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல ஒவ்வொரு ஆண் மகனுக்கும் எத்தனை பங்கு உள்ளதோ அதைவிட அதிகமான பங்கு பெண்களுக்கும் உண்டு.

ஏனெனில் இந்த தீனினால் – மார்க்கத்தினால் அதிகம் பயன் அடைந்தவர்கள் பெண்கள், அதிகம் சிறப்படைந்தவர்கள் பெண்கள்.

துரதிஷ்டவசமாக, இன்றைய பெண்கள் இதை உணரத் தவறி தமக்கென வேறு பாதை, வேறு இலட்சியம், வேறு போக்கு, வேறு நோக்கு என வரையறுத்து இந்த தீனை ஆண்களுக்கு மட்டுமே என ஒதுக்கி ஒதுங்கிக் கொண்டனர்.

பெண்கள் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கி தம் பொறுப்புக்களை உணர்ந்துக் கொள்ளாத வரையில் எந்தவொரு சமுதாய மாற்றமும் இந்த மண்ணில் நிகழப் போவதில்லை.

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னுள்ள காலகட்டத்தை நினைத்துப் பாருங்கள்.

முழு உலகிலும் பெண்களின் நிலை என்னவாக இருந்தது. ஆண் மட்டும் தான் மனிதப் பிறவி, பெண் என்பவள் ஆண்களுக்கு சேவை செய்யப் படைக்கப்பட்ட ஒரு உயிரிணம், விலங்குகள் போலத்தான் பெண்களும் நடாத்தப்பட்டனர்.

பெண்களுக்கு ஆன்மா உண்டா? இல்லையா? என்ற ஆராய்ச்சிகளை மேற்கத்திய நாடுகள் கூட நடாத்த தவறவில்லை.

பெண் குழந்தை பிறப்பதையே அவமானச் சின்னமாக, மானக் கேடாக கருதிய சமுதாயத்தில்,”பெண் என்பவள் மனித குழத்தில் ஓர் அங்கம் ” என்ற புரட்சி கரமான செய்தியை அறிவித்த முதல் மார்க்கம் இஸ்லாம்.

வாரிசுப் பொருட்களோடு பொருளாகக் கருதி பெண்களைப் பங்கீடு செய்துக் கொண்டிருந்த சமுதாயத்தில் வாரிசுச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டு என பிரகடனப் படுத்திய முதல் மார்க்கம் இஸ்லாம்.

இது பெண்களை கௌரவித்த மார்க்கம், பெண்களை சிறப்பிக்க வந்த மார்க்கம், பெண்களுக்கு வாழ்வளிக்க வந்த மார்க்கம்.

இந்த உணர்வு, இந்த சிந்தனை இன்றைய இஸ்hலாமியப் பெண்களிடம் மடிந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்க் கொண்டுள்ளது.

ஆனால் அன்றைய காலப் பெண்களோ இதை உணர்ந்திருந்தனர். எனவே இஸ்லாத்தை முதன் முதலில் தழுவியது ஒரு பெண். வஹியின் ஆரம்பமே ஒரு பெண்ணின் கதீஜா (ரலி) அவர்களின் துணையோடு துவங்கிற்று. இஸ்லாத்தை முதன் முதலில் தழுவியது ஒரு பெண் என்றால் – இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்ததும் ஒரு பெண்தான். தன் உயிரை ஈந்து தீனை வாழ வைத்தார்கள் அன்னை சுமையா (ரலி) அவர்கள். இன்றைய பெண்களிடம் இந்த உணர்வு இல்லை. இதன் விளைவு சமுதாயத்தில் புற்று நோயாக புரையோடிக் கிடக்கின்றது.

பெண் குழந்தை பிறப்பது சாபக் கேடு, பெண் குழந்தையை வளர்ப்பது பொருளாதாரச் சுமை என்று எண்ணி, பெண்கள் அவமானச் சின்னமாகக் கருதப்பட்ட காலத்தில், எவன் ஒருவன் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்குகிறானோ, அம்மனிதன் மறுமையில் நரகம் செல்லாதவாறு இரண்டு பெண்களும் திரையாக நிற்பார்கள் என பெண்ணை மகள் என்ற நிலையில் கௌரவப்படுத்தியது இஸ்லாம்.

நீங்கள் அவர்களுக்கு ஆடை, அவர்கள் உங்களுக்கு ஆடை என ஆண் பெண் உறவை, பரஸ்பர பாசத்தை, காதலை தனக்கே உரிய அழகிய பாணியில் விளக்கமளித்தது அல்குர்ஆன்.

மனிதர்களே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியரிடத்தில் சிறந்தவர் என்று மனைவி என்ற நிலையில் கௌரவப்படுத்தியது இஸ்லாம்.

”ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவுகின்றார். நான் முதலில் யாருக்கு கடமைப்பட்டுள்ளேன்? உன் தாய்க்கு, இரண்டாவதாக? உன் தாய்க்கு, மூன்றாவதாக? உன் தாய்க்கு, நான்காவதாக? உன் தந்தைக்கு. ஆம்: முதல் மூன்று நிலைகள் தாய்க்கு. நான்காவது நிலைதான் தந்தைக்கு. ஒரு குழந்தையை தாய் கருவில் சுமப்பது முதல் நிலை, பிரசவிப்பது இரண்டாவது நிலை, பாலூட்டுவது மூன்றாவது நிலை, அக்குழந்தையை வளர்க்கும் நான்காவது நிலையில் தான் தந்தை வருகின்றார். இதை உணர்ந்து முதல் மூன்று நிலைகளைத் தாய்க்கு கொடுத்து தாய் என்ற நிலையில் பெண்ணை கௌரவப் படுத்தியுள்ளது இஸ்லாம்.”

இவ்வாறு பெண்களை மகளாக, தாயாக, மனைவியாக, சகோதரியாக என எல்லா நிலையிலும் கௌரவப் படுத்தியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இந்த தீன் மட்டுமே.

இந்த மார்க்க அறிவு இல்லாமல் சுதந்திரம் வேண்டும் என நாகரிகத்தின் பின்னால் ஓடுகின்றோம். கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணெய் தேடி அலைகிறோம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவாய்ப்பு என்ற பெயரில் பெண்ணினத்தை ஏமாற்றி வருகின்றது இந்த நவநாகரிகம்.

ஆண்களின் சிற்றின்ப ஆர்வத்தை தூண்டும் போதைப் பொருளாக மட்டுமே பெண்கபை; பயன்படுத்துகின்றது இன்றைய நாகரிகம்.

டயர் விளம்பரமா? அரைகுறை ஆடையில் பெண்கள்.

பற்பசை விளம்பரமா பெண்கள். மீண்டும் அந்த அறியாமைக் கால மூட பழக்க வழக்கங்களை, அந்தப் பழைய ரசத்தையே புதிய போத்தலில் புகட்டுகின்றது இன்றைய நாகரிகம்.

பெண்களை மாணிக்கங்களாகப் பாதுகாக்கும் இஸ்லாத்தை விட்டு விட்டு, பெண்மையைக் கருங்கல், செங்கல் ஆக வீதி தோறும் இறைக்கும் நாகரிகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நாலு பெண்கள் சேர்;ந்தால் அவர்களின் பேச்சு எதை நோக்கி உள்ளது? புடவை? பூ? சில சமயல் குறிப்புகள்? தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் மெகா தொடர்கள்? நகை? இவைதான் வாழ்க்கையா? என்றாவது மார்க்க சிந்தனையைப் பேசி இருக்கிறார்களா? மறுமையைப் பற்றி நினைக்கின்றார்களா?

என்மகன் நோயற்ற வாழ்வு வாழவேண்டும், அதிகம் அதிகம் சம்பாதிக்க வேண்டும். என் மகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்று ஏங்கும், கலங்கும் தாய்மார்கள் நிறைய

எந்த தாயாவது என் மகளை, மகனை மறுமையில் நரக நெருப்பு தீண்டாமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டதுண்டா?

அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக கண்ணீர் சிந்தும் கண்கள் நிலையான மறுமை வாழ்வுக்காக கலங்கியதுண்டா என்றால் இல்லை.

இரண்டு வகையான யுத்தங்கள் உண்டு, ஒன்று இராணுவ யுத்தம். இது நமக்குத் தெரியும். மற்றொன்று சிந்தனை யுத்தம், கத்தியின்றி இரத்தமின்றி நடக்கும் இந்த சிந்தனை யுத்தத்தில் நாம் நாள்தோறும் மடிந்து கொண்டிருக்கின்றோம். தொலைக்காட்சி, இணையதளம், செய்தித்தாள்கள் வாயிலாக நம்மூளை தினம் தோறும் சலவைச் செய்யப்பட்டு அல்லாஹ்வை விட்டு விலகிக் கொண்டிருக்கின்றோம்.

சகோதரிகளே! விழித்தெழுங்கள்! அல்லாஹ்வின் பக்கம், அல்லாஹ்வின் பாதையில் விரைந்து வாருங்கள். அல்லாஹ்வின் பாதையில் முதல் கட்டம் தவ்பா செய்வது. தவ்பா என்றால் யா அல்லாஹ்! எங்களை மன்னித்து விடு என்று வாயால் மொழிவது அல்ல, நம் செயலில் காட்ட வேண்டும்.

ஷைத்தானியப் பாதையை விட்டு விலகி, அல்லாஹவின் பாதையில் திரும்புவதுதான் தவ்பா.

இந்த முதல் கட்டம் நிறைவேறினால், அடுத்து இரண்;டாவது கட்டம் பேணுதலாக இருப்பது இறைவனின் பாதையில் தவ்பா செய்து மீண்டு விட்டோம். இனி எந்தச் சூழ்நிலையிலும் இப்பாதையை விட்டு விலகக் கூடாது என்று பேணுதலாக இருக்க வேண்டும்.

மூன்றாவது கட்டம்: பற்றற்ற நிலை. ஹலாலான விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுப்பது. நாம் வாழ்வின் இலாப நஷ்டங்களை இறைவனுக்காகப் பொறுத்துக் கொள்வது. இறைவனுக்காக நாம் தியாகம் செய்யும் போதுதான், நம் வாழ்க்கை பரக்கத் (அருள்வளம்) நிறைந்நததாக அமையும்.

நான்காவது கட்டத்தில் அல்லாஹ்வின் மீது பேரன்பும், பாசமும் செலுத்துவது. இதை முழுமையாக நிறைவேற்றினால் ஐந்தாவது கட்டமான இறைவனின் திருப்தி நமக்கு கிடைக்கும்.

இந்த ஆன்மீகப் பாதையில் இறைவனின் திருப்தியை நம் இலட்சியமாகக் கொண்டு நம் வாழ்க்கையை, சமுதாயத்தை மாற்றி அமைப்போம். இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்…

ரமழான் பிறை பார்க்கும் மாநாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 17ம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறும்.

உலமாக்கள், கதீப் மார்கள், ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள மற்றும் தக்கியா, ஸாவியா ஷரீஆ கவுன்சில் அன்ஜுமன் பாயிஸ் இ ரஸா மேமன் ஹனபி பள்ளி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இம்மாநாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

எனவே 17.06.2015 புதன் மாலை 6.27 மணி முதல் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைப் பார்க்குமாறும், பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 0112432110, 0115234044 (பெக்ஸ் 0112390783) 0777 316415 ஆகிய தொலைபேசி இலக்கங் களினூடகவோ அறியத்தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளி வாசல் கேட்டுக் கொள்கின்றது.

அனர்த்தங்கள் தரும் படிப்பினை என்ன?

flood
பாரிய வெள்ள அனர்த்தத்தினால் நாட்டின் பல பாகங்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாம் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய சில முக்கியமான விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கிறேன்.

அண்மைக் காலமாக இயற்கை அனர்த்தங்கள் பரவலாக அதிகரித்து வருகின்ற ஒரு நிலையை நாம் காண்கிறோம். வெள்ளம், மண்சரிவு, சூறாவளி என்று பல்வேறு அனர்த்தங்கள் உலகளாவிய ரீதியாக அதிகரித்து வருகின்றன.

அவுஸ்திரேலியாவிலே பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடு வெள்ளப் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய பல ஆண்டுகளுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதேபோல பிரேஸில், மொஸாம்பிக், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற காலப்பகுதி இது. சில மாதங்களுக்கு முன்னால் பாகிஸ்தானில் மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதை நாம் அறிவோம்.

இவ்வகையான அனர்த்தங்களின்போது எமது பார்வை எப்படி அமைய வேண்டும் என்பது மிக முக்கியமானது. வெறுமனே நிகழ்வுகளுக்குப் பின்னால் செல்கின்றவர்களாக அல்லாமல், அவ்வப்போதைய பிரச்சினைகளில் அவ்வப்போதைய தீர்வுகளைப் பற்றி சிந்திப்பவர்களாக அல்லாமல் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கின்ற தத்துவங்களை, தாத்பரியங்களை நாம் மிகச் சரியாக புரிந்து கொள்வது இன்றியமையாதது.

இத்தகைய அனர்த்தங்கள் தண்டனையா, சோதனையா என்ற வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதை விட, இத்தகைய அனர்த்தங்களின்போது நாம் எத்தகைய படிப்பினை பெற வேண்டும் என்பதை சிந்திப்பது மிக முக்கியமானது. இந்த விடயத்தை இஸ்லாமிய நோக்கில் நாம் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மனித வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது உலக வாழ்வு ஒரு சோதனைக் களம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் இதனை பல இடங்களில் வலியுறுத்திச் சொல்வதை நாம் பார்க்கிறோம்.

“விசுவாசிகளே! பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும் செல்வங்கள், உயிர்கள், கனிகளின் விளைச்சல்கள் ஆகியவற்றின் குறைவைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம்.” (அல்பகரா: 155)

மேலும்,

‘மனிதனை நாம் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம்.’

‘நாம் வாழ்வையும் மரணத்தையும் படைத்திருப்பது உங்களில் யார் மிகச் சிறந்த செயல் செய்கிறார் என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே.’
என்றும் அல்லாஹுத் தஆலா குர்ஆனிலே கூறுகிறான்.

சோதனைகள் என்று சொல்கின்றபோது அது தீயதாக மாத்திரம்தான் அமையும் என்பதற்கில்லை. சிலபோது சோதனைகள் நன்மையான வடிவத்தில் அமைந்து விடவும் கூடும். அல்லாஹ் தீமையைக் கொண்டு எம்மை சோதிப்பதைப் போல நன்மையைக் கொண்டும் சோதிக்கலாம்.

‘…தீமையை (துன்பங்களை)க் கொண்டும் நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறNhம்…’ (அன்பியா: 35)

அதாவது, அல்லாஹ் தந்தும் சோதிப்பான் எடுத்தும் சோதிப்பான்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம்தான் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படியல்ல, பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, பாதிக்கப்படாதவர்களும் சோதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு பாதிக்கப்படாதவர்கள் இந்த அனர்த்தத்தின்போது எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை அல்லாஹ் பார்க்கிறான்.

உண்மையில் முழு வாழ்க்கையும் சோதனைமயமானது என்ற இந்தத் தெளிவான உண்மையை நாம் புரிந்து கொள்வது இன்றியமையாதது.

இஸ்லாமிய நோக்கிலே இந்தப் பிரச்சினைகளுக்கு பல தீர்வுகள் கூறப்பட்டிருக்கின்றன. அவை நிலையான தீர்வுகள். அனர்த்தங்கள் வருகின்றபோது நாம் உடனுக்குடன் வழங்குகின்ற தீர்வுகள் (Immediate Solution) இன்றியமையாதவையே. ஆனால், அதனைத் தொடர்ந்து நிலையான தீர்வுகளை (Ultimate Solution) நோக்கி நாம் நகர வேண்டும்.

உண்மையில் பாவங்கள் மனித சமூகத்தில் பரவுகின்றபோது அல்லாஹ் இத்தகைய அனர்த்தங்கள் ஊடாக எம்மைத் தண்டிப்பான், சோதிப்பான். ஏனென்றால் பாவங்கள் அனைத்தும் சாபங்கள் நன்மைகள் அனைத்தும் அருள்கள்.

“ஓர் அனர்த்தம் ஏற்படுகிறதாயின் அதற்குக் காரணம் பாவமாக இருக்கும்” என அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே, பாவங்களிலிருந்து விடுபடுவது, நன்மைகளை அதிகமாகச் செய்வது, துஆ, இஸ்திபார்களில் ஈடுபடுவது, தனிப்பட்ட வாழ்க்கைகுடும்ப வாழ்க்கை சமூக விவகாரங்களை சீர்செய்து கொள்வது முதலானவை இத்தகைய சோதனைகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நன்மையான அம்சங்களைக் கொண்டும் தீய அம்சங்களைக் கொண்டும் சோதிக்கிறான். பாதிக்கப்பட்ட மக்களை ஒருவகையிலும் பாதிக்கப்படாதோரை இன்னொரு வகையிலும்அவர்கள் இத்தகைய அனர்த்தங்களின்போது எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதனைப் பார்ப்பதற்காகஅல்லாஹ் சோதிக்கிறான் என்பதையும் கவனத்திற் கொண்டு அதற்கமைவாக நாம் செயற்பட வேண்டும்.

எனவே, இந்தச் சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் பெருமளவில் உதவி செய்ய வேண்டும். இது சமூக சேவை அல்ல சமய சேவை, சன்மார்க்க சேவை. நமக்கு முன்னாலுள்ள மிகப் பெரிய ஆன்மிக, தார்மிக கடப்பாடு உடனடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“யார் தன்னுடைய சகோதரனுடைய கஷ்டத்தை நீக்கி வைக்கிறாரோ அல்லாஹ் மறுமை நாளில் அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கஷ்டத்தை நீக்கி வைக்கிறான்.” (அல்புகாரி, முஸ்லிம்)

“ஒரு சகோதரன் தனது அடுத்த சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்கிறான்.” (அல்புகாரி, முஸ்லிம்)

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பிறருக்கு செய்கின்ற ஒவ்வோர் உதவியும் எமக்கு நாமே செய்து கொள்கின்ற உதவி. அது எமது மறுமை வாழ்க்கைக்கு நாம் சேமித்து வைக்கின்ற மிகப் பெரிய உபகாரமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றுவோமாக!