Category Archives: இஸ்லாமிய அழைப்பு மையம் (ipc)

அறிந்து கொள்வோம்

حياة أسرية
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பதாக நாம் உங்களுக்கு அளித்தவைகளிலிருந்து நீங்கள் தருமம் செய்யுங்கள்.” (அத்தகாபுன் : 10)

“விசுவாசிகளே நீங்கள் சம்பாதிக்கின்றவைகளிலிருந்தும், நாம் உங்களுக்கு (பூமியிலிருந்து) வெளிப்படுத்திய (தானியம், கனிவர்க்கம்) முதலியவற்றிலிருந்தும் நல்லவைகளையே (தானமாக) செலவு செய்யுங்கள் அவைகளிலிருந்து மோசமானவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள்.” (அல் பகரா : 267)

“விசுவாசிகளே எவர்கள் தங்கள் பொருட்களை (தர்மத்திற்காக) இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பரகசியமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. தவிர அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை. அவர்கள் துக்கிக்கவும் மாட்டார்கள்.” (அல் பகரா : 267)

“நபியே அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம் ஒரு வித்தைப் போன்றது.

அந்த வித்து ஏழு கதிர்களைத் தந்து. ஒவ்வொரு வித்திலும் ஏழு கதிர்கள் தோன்றின. ஒவ்வொரு கதிரிலும் நூறு விருதுகள், ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஏழு வித்திலிருந்து உற்பத்தியாயின.

அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு இரட்டிப்பாக அளிக்கின்றான். ஏனெனில் அல்லாஹ் (கொடையில்) மிக்க விசாலமானவனாகவும், அறிபவனுமாக இருக்கிறான்.”

(அல் பகரா : 261)

தனது செல்வத்தை இறைவனின் பாதையில் செலவழிக்கும்படி பல் வேறு வகையிம் தூண்டும் அல் குர்ஆன் அதனைத் தர்மம் செய்யும் ஒழுங்கு முறைகளையும் விளக்கு கின்றது.

* * *

“எவர்கள் தங்களுடைய பொருள் களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொளை வாங்கியவனுக்கு)த் தாங்கள் கொடுத் ததற்காக இகழ்ச்சியையாவது, துன் பத்தையாவது (அதனோடு) சேர்க்க வில்லையோ அவர்களுக்கு அவர்களுடைய கூலி, அவர்க ளுடைய இறைவனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்ல. அவர்கள் துன்பமடையவும் மாட்டார்கள்.’

“அன்றி (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள யாவையும் அவன் தன்னுடைய அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். சிந்தித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகளிருக்கின்றன.”

(அல் ஜாதியா : 12 – 13)

எனவே அல்லாஹ் வழங்கியுள்ள இந்த அருட்கொடைகளைப் பற்றிச் சிந்தித்து ஆராய்நது அவற்றைக் கொண்டு பயனும் பலனும் பெறும் உரிமை மனிதனுக்கு உண்டு என்பதை விளக்கி மனிதனுக்கு வல்ல அல்லாஹ் வழங்கியுள்ள இந்த மகத்தான அருட்கொடைகளை நியாயமான முறையில், சன்மார்க்க வரம்பிற்குட்பட்ட அனுபவிக்கும் உரிமையைத் தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என வலியுறுத்திக் கூறுகின்றது.

வட்டியும் சூழல் நிர்பந்தங்களும்

பொதுவாக இன்றைய பணவியலைப் பற்றிப் பேசும் போது ஒரு அடிப்படை விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வங்கி பற்றிப் பேசும் போது இவ்வடிப்படை மிக முக்கியமானதாகும். இன்றைய வங்கி முறைமை வட்டியை அடிப்படையாகக் கொண்டது. எங்களுக்கும் வங்கிக்கும் எந்த விதத் தொடர்பும் இருக்கக் கூடாது. காரணம் அது ஒன்றில் :

1-நேரடியாகவே வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது,

2-மறைமுகமாக வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது,

3-வட்டியை அடிப்படையாகக் கொண்டியங்கும் அவைகளுக்குத் துணைபோவதாக இருக்கும்.

ஆக உலகில் எந்த அறிஞரும் வங்கியோடு தொடர்பு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்றே தீர்ப்புச் சொல்ல வேண்டும். இன்று வங்கியோடு தொடர்புள்ளவர்களை 3 வகைப்படுத்தலாம்.

1.இஸ்லாம் வட்டியைத் தடை செய்கிறது அது பாரதூரமான கொடும்பாவம் என்பதையெல்லாமல் கணக்கில் எடுக்காமல் வங்கியுடன் மனவிருப்பத்துடன் எல்லா வகையிலும் தொடர்புள்ளவர்கள். இவர்கள் வட்டியெடுப்பவர்கள் மற்றும் கொடுப்பவர்கள் அதற்கு துணைபோபவர்கள்.

2.இஸ்லாம் வட்டியைத் தடை செய்கிறது. எனவே வங்கியுடனான தொடர்பை மட்டுப்படுத்தி ஆனால் அவசியமா இல்லையா என்பதைப் பாராது வங்கியின் ஒரு சில பகுதிகளை தாரளாமாகப் பயன்படுத்துபவர்கள். உதாரணமாக: நடைமுறைக் கணக்கு, சேமிப்புக் கணக்கு, வங்கிதரும் ஸில்வர்காட் கோல்ட் கார்ட் கடன் வசதிகள்… என இப்பட்டியல் நீளும். இவர்கள் வங்கியோடு இது போன்ற தொடர்புகள் வைப்பது தவறில்லை என எண்ணி அதில் தாராளம் காட்டுபவர்கள்.ஆனால் வங்கியுடன் இதர விடயங்களில் தொடர்பகொள்வது ஹராம் என்ற உறுதியான நம்பிக்கையிலுள்ளவர்கள்

3. வங்கியுடனோ வட்டியைத் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த நிறுவனங்களுடனோ கொடுக்கல் வாங்கல் தொடர்பு வைப்பது ஹராம் என்பதை அறிந்து வங்கியுடன் எந்த விதத் தொடர்பையும் வைக்கக் கூடாது என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள். ஆனால் தவிர்க்க முடியாத எந்த வகையிலும் வங்கி மூலமன்றி செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் விடயங்களில் மாத்திரம் தொடர்பை பயன்படுத்தி விட்டு வங்கியைத் தவிர்ப்பவர்கள்.அந்த நிலையிலும் அதை வெறுப்போடும் மன விருப்பமின்றியும் செய்பவர்கள். அதே நேரம் தாம் இந்த நிர்பந்த சூழலில் இதைப் பயன்படுத்துகிறோம் என்பதற்காக அதை அடிப்படையிலேயே ஹலால் என்று நினைக்கமாட்டார்கள். இது ஹராமானததான் ஆனால் எனக்கு இதனூடாக அன்றி இதைச் செய்ய முடியாது என்பதனால் பயன்படுத்துகிறேன் என்ற எண்ணத்தோடுள்ளவர்கள்.

இந்த 3வது நிலையில் உள்ளவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான் என்றே மார்க்க அடிப்படையில் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம் இங்கே நாம் செய்யப் போகும் அந்த வியாபாரமோ அல்லது கொடுக்கல் வாங்கலோ அடிப்படையில் ஹலாலலானது. நாம் செய்யப்போகும் அந்தத் தொழில் அல்லது ஒரு செயற்பாடு வங்கியுடனானது அல்ல. ஆனால் வங்கி மூலமே செய்ய வேண்டியிருக்கிறது . அதற்கு இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்ட சட்டம் குறுக்காக நிற்கிறது. எனக்கு இஸ்லாம் அனுமதித்த ஒன்றைச் செய்ய அது எனக்குக் குறுக்காக நிற்கிறது. இப்பொழுது நான் குற்றவாளியல்ல. கப்பம் கேட்கும்போது வீடு போய்ச் சேர அல்லது வியாபாரத்தை தொடர்ந்து நடத்த வேறு வழியின்று அதை வழங்குவது குற்றமாகாது. அதுபோன்ற ஒன்றே இது. இந்த அடிப்பைடயில்தான் நாம் வாகனங்களை பயன்படுத்துகிறோம். விமான சீட்டுக்களை வாங்குகிறோம். வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறோம். மேற் சொல்லப்பட்ட 3இலும் இன்ஸூரன்ஸ் (கப்பம்) இருக்கிறது. ஆனால் அது நாமாக விரும்பிக் கேட்கவில்லை. நாம் வாகனம் ஓட்டுவது வாங்குவது விற்பது இஸ்லாம் எங்களுக்க அனுமதித்த ஒன்று. அதற்கு குறுக்காக இந்த தேட் க்ளாஸ் இன்ஸூரன்(கப்பம்) நிற்கிறது. அதற்காக வாகனம் வாங்குவது ஹராம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. நாம் விமானச் சீட்டுக்கு பணம் செலுத்தும்போது இன்ஸூரன்ஸிற்கும் சேர்த்துத்தான் அறவிடப்படுகிறது. விமானத்தில் பயணப்பிது இஸ்லாம் எங்களுக்கு அனுமதித்த ஒன்று. அதற்கு குறுக்காக இந்த வட்டிச் சட்டம் வந்தால் நாம் ஹஜ்ஜுக்குப் போவது ஹராம் என்று அர்த்தமாகாது. இது நாங்கள் விரும்பிய ஒன்றல்ல. அதுபோன்று இஸ்லாத்தின் தூய்மைக்கு எதிரான மனித கலாச்சாரத்திற்கு எதிரான லட்சக்கணக்கான இணைதளங்கள் மக்களை வழிதவறச் செய்துகொண்டிருக்கின்றன. அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு உண்மையை உணரச் செய்வது ஆற்றலுள்ளவர்களது கடமை. ஆனால் அதைப் பதிவு செய்ய இன்னும் அதற்கு ஒத்த நடைமுறைகளை மேற்கொள்ள டெபிட் காட்டை பயன்படுத் வேண்டியுள்ளது.

அதற்காக வேண்டி டெபிட்கார்ட் அடிப்படையிலேயே ஹலால் என்று தீர்ப்பு வழங்க முடியாது. காரணம் நான் ஏற்கனவே சொன்னதுபோல் வங்கியுடனான தொடர்பு ஒன்றில் நேரடியாகவே வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது மறைமுகமாக வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது வட்டியடிப்படையாகக் கொண்டியங்கும் அவர்களுக்கும் துணைபோவதாக இருக்கும். அப்படியிருக்கையில் எவ்வாறு டெபிட்காட் ஹலால் என்று சொல்ல முடியும் வங்கி இதன் மூலம் இலாப நோக்கமற்ற அல்லது முறையான இலாப நோக்கங்கொண்டஒரு சேவையையா எமக்குத் தருகிறது. சிறுதுள்ளி பெருவெள்ளம் என்ற அடிப்படையிலும் வேறு பெயர்களிலும் எம்மைச் சுரண்டும் பலவழிமுறைகளில் டெபிட் காடும் ஒன்று. எனவே அது அடிப்படையிலே ஹராம்தான். ஆனால் இஸ்லாம் அனுமதித்த ஒரு செயல்பாட்டுக்குக் குறுக்கே வரும்போது நாம் அதனூடாகவே அதைத் தாண்ட வேண்டியிருக்கும் போது அதைப் பயன்படுத்துவதில் அல்லாஹ் எம்மைக் குற்றம் பிடிக்கமாட்டான். இன்ஷா அல்லாஹ்.

{ قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَحِيمٌ (145)} الأنعام: 145

6:145. (நபியே!) நீர் கூறும்: ‘தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை’ – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் -நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

இஸ்லாம் அனைத்துச் சூழலுக்கும் எமக்கு வழிகாட்டியிருக்கிறது. மனித மனநிலைகளை அறிந்த எல்லாம் அறிந்த இறைவனது மார்க்கத்தில் நாம் இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்

முஸ்லிம் மாணவிகள் பௌத்த சாஸ்டாங்கங்களை பின்பற்றவேண்டுமா ?

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 10 எல்லைக்குள் அமைந்திருக்கும் பௌத்த பெண்கள் பாடசாலையான பெஸிபத்தேரியன் என்ற பாடசாலையில் 1200 மாணவிகள் கற்று வருகின்றார்கள். இவர்களில் மருதானை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சார்ந்த 600 முஸ்லிம் மாணவிகள் கற்பதாக தெரியவருகின்றது.

100 வருடங்களாக இந்த பாடசாலை இயங்கி வருவதாகவும் பாடசாலை தொடங்கியதில் இருந்து அங்கு முஸ்லிம் மாணவிகள் கற்றுவருவதாகவும் கடந்த சில மாதங்களாக புதிதாக வந்த பாடசாலை அதிபர் முஸ்லிம் மாணவிகளையும் பாடசாலையில் மாதாந்தம் நடைபெறும் பௌத்த சாஸ்டாங்கங்கள், சடங்குகள் என்பனவற்றில் கலந்து கொள்ளுமாறு உத்தரவுகளை பிறப்பித்து நடைமுறை படுத்தி வருவதாக மாணவிகள் பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிபருடன் பேசுவதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க சந்திப்பை கூட்ட முயன்றபோது அதற்கு அதிபர் அனுமதிக்க வில்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 25 திகதி பாடசாலையில் புத்தர் சிலை வைப்பு நிகழ்வுக்கு முஸ்லிம் மாணவிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று அதிபர் உத்தரவு இட்டுள்ளார். எனிலும் முஸ்லிம் மாணவிகள் அதில் கலந்து கொள்ளவில்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இங்கு ஹிஜாப் அணியமுடியாத நிலையில் தான் முஸ்லிம் மாணவிகள் இந்த பௌத்த பாடசாலையில் கற்றுவருகின்றனர். இங்கு 600 முஸ்லிம் மாணவிகள் கற்று வருகின்றபோதிலும் 60 ஆசிரியர்கள் மத்தியில் 02 முஸ்லிம் ஆசிரியைகள் மட்டும் கடமையாற்றுகின்றனர். அதில் ஒருவர் உப அதிபர் என்று தெரிய வருகின்றது.

இலங்கையில் பல பகுதிகளில் இஸ்லாமிய உடை அணிவதில் பல தடைகளை முஸ்லிம் மாணவிகள் எதிர்கொண்டு வருகின்றமை செய்திகளாக மட்டும் எம்போதும் இருந்து வருகின்றது.

மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹஜாப் அணிவதற்கு எதிரான தடை முற்றாக இன்னும் தீர்க்கப் படவில்லை பல தடவைகள் முஸ்லிம் மாணவர்களினாலும் மட்டகளப்பு அனைத்துப் பள்ளிவாயல்களின் சம்மேளனதினாலும் கோரிக்கைகள் விடப்பட்டும் சரியான தீர்வு பெறப்படவில்லை.

அதே போன்று வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியில் குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சி நெறியைத் தொடரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர கல்லூரி நிருவாகம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக முக்கிய முஸ்லிம் அமைச்சர் தலையிட்ட பின்னரும் தடை தொடர்ந்தது.

கண்டி நகரில் அமைத்துள்ள பதியுதீன் முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளின் சிங்கள மொழி பிரிவின் வகுப்பு ஒன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது பின்னர் அதிபரினால் அந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் பாத்த தும்பரை பிரிவுக்குல் அமையும் சில தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவியர் அணியும் உடையான ஹிஜாபை தடை செய்ய சில விசமிகள் முயல்வதாக தெரிவிக்கபட்டது இந்த பகுதியில் இருக்கும் குறித்த இரண்டு பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவிகளை ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய சிலர் கூறியதாக அறிய முடிந்தது.

இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்தால் முஸ்லிம் சமுகத்தால் இவை ஒரு அடக்குமுறையின் அடையாளமாக பார்க்கபடும் நிலை ஏற்படும். எந்த ஒரு சமூகமும் தான் சுதந்திரகாக செயல்படமுடியவில்லை என்று உணரும்போது அடக்குமுறைக்கு எதிராக இயல்பாகவே செயல்பட தூண்டப்படும். இது சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை இன்மையை தோற்றுவிக்கும் எப்போதும் அடக்கப்படும் ஒடுக்கப்பட்டும் சமூகங்கள் அடக்குமுறைக்கும் , ஒடுக்கு முறைக்கும் அடிபணித்து போவதில்லை மேலாதிக்க அடக்குமுறை சக்திக்கு எதிராக இயங்க முற்படும் நாட்டின் அமைதி குலையும் அரசு சமுகங்களிகிடையில் அமைதியையும் , நம்பிகையையும் ஏற்படுத்த தேவையானவற்றை நடைமுறைபடுத்த வேண்டும். இலங்கையில் வாழும் அணைத்து சமூகங்களினதும் நம்பிக்கையை பெற அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.