Category Archives: வைத்தியம்

இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா

எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.

தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் “ஈ” உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி., போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள், முளை கட்டிய பருப்புகள்.

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால், இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான “ஒமேகா 3” வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.

உடலில் கொழுப்பு சேர விடாமல், “ஒமேகா 3” தடுக்கிறது. எனவே, வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.

இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில், “பாலி பெனோல்ஸ்” என்ற இதயத்திற்கு நன்மை செய்யும், “ஆன்டி ஆக்ஸிடென்ட்” அதிகமாக இருக்கிறதாம்.

டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.

அதிக உப்புத்திறன் கொண்ட “அஜினமோட்டோ”, சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. உணவு உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கொண்டு உணவு தயாரிக்கவும்.

எப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.

குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்

கேள்வி: குடும்பக் கட்டப்பாடு, கருச்சிதைவு போன்றன பற்றிய இஸ்லாமிய வரையறைகளை விளக்குவீர்களா?

பதில்: மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது. நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அமைந்தது ‘அஸ்ல்’எனும் செயற்பாடாகும். ‘அஸ்ல்’ என்பது ஆண் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். நபித்தோழர்கள் இம்முறையைக் கையாள்வோராய் இருந்துள்ளனர். ‘அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் ‘அஸ்ல்’ செய்வோராய் இருந்தோம்.’ என ஜாபிர் (ரலி) கூறியுள்ளார். (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்)

‘ஒருபோது ஒருவர் நபிகளாரிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு பெண் இருக்கிறாள். நான் அவளிடத்தில் அஸ்ல் செய்கின்றேன். அவள் கர்ப்பமுறுவதை நான் விரும்பவில்லை. ஆயினும், யூதர்களோ அஸ்ல் என்பது சிறிய கொலையாகும் என்கின்றனர்’ என்றார். இதனைச் செவிமடுத்த நபியவர்கள் ‘யூதர்கள் பொய் கூறுகின்றனர். அல்லாஹ் படைக்க நாடினால் அதனை உம்மால் தடுக்க முடியாது’ (திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா) எனக் கூறினார்கள். (அதாவது சிலவேளை கணவன் அஸ்ல் செய்யினும், அவன் அறியாதவாறு ஒரு துளி இந்திரியமாவது தவறி, பெண்ணின் கர்ப்பத்தையடைந்து, அவள் கர்ப்பம் தரிக்க இடமுண்டு என்பதாகும்.) ‘அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராயிருந்தோம். இவ்விடயம் நபிகளாருக்கு எட்டியபோது அவர்கள் கூடாது என்று தடை செய்யவில்லை’ என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய மேலும் ஓர் அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் உமர் (ரலி) அவர்களது அவையில் ‘அஸ்ல் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டது. அங்கு வீற்றிருந்த ஒருவர், ‘அது சிறிய கொலை என நம்பப்படுகிறது’ என்றார். அவ்வேளை அங்கிருந்த அலி (ரலி), ‘அதுகொலையல்ல. அது கொலையாக அமைய (குறித்த கரு) ஏழு கட்டங்களைக் கடந்திருக்க வேண்டும். அவையாவன: களிமண் சத்து, இந்திரியத்துளி, இரத்தக்கட்டி, எலும்புத்தொகுதி, சதையமைப்பு, வேறு (முழு) உருவம்’ என்றார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) ‘அலியே, உண்மை சொன்னீர், அல்லாஹ் உமக்கு நீண்ட ஆயுளை அளிப்பானாக’ எனக் கூறினார்.

குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கின்ற நியானமான காரணங்கள்:

1. தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் மூலமோ அறிந்தால், குடும்பக்கட்டுபாட்டிற்கு அனுமதியுண்டு. இக்கருத்துக்கு ஆதாரங்களாகக் கீழ்வரும் திருவசனங்களை அறிஞர்கள் குறிப்பிடுவர் அவையாவன:

”உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்’ (2:195)

‘மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.’ (4:29)

2. லௌகீக ரீதியில் அமைந்த சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அது பின்னர் மார்க்க விவகாரங்களையும் பாதிக்கும். தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது பாவத்தையோ செய்ய வேண்யேற்படுமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.

‘அல்லாஹ் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை.’ (5:6)

3. தனது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு. உஸாமா (ரலி) அறிவிகின்றார்: ‘ஒருமுறை ஒருவர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்’ என்றார். ‘அதற்கு நபிகளார் ‘ஏன் அப்படிச் செய்கின்றீர்?’ என்று வினவ அதற்கு அம்மனிதர் ‘நான் எனது குழந்தையையிட்டு அல்லது குழந்தைகளையிட்டு அஞ்சுகின்றேன்’ என்றார். அதற்கு நபிகளார் ‘அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்’ (அதாவது இத்தகைய தனிமனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது. அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்.’

4. பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும்.

பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனைவியுடன் (கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள் இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். (ஆயினும், இதனை ஷரீஅத் ஹராம் என முற்றாகத் தடை செய்யவில்லை என்பதனைக் கவனத்திற்கொள்க.)

மேலே குறிப்பிட்ட நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கருச்சிதைவை அது அனுமதிப்பதில்லை. அக்கருவானது ஹராமான முறையில் தரித்திருப்பினும் சரியே, ஒரு கருவை அதற்கு ரூஹ் ஊதப்பட்டதன் பின்னர் சிதைப்பது ஹராமான மாபெரும் குற்றமாகும்.

ஆயினும், குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கு ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவரின் இரு தீங்குகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் குறைந்ததைத் தெரிவு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கு அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது அறிவுடைமையும் ஆகாது. மேலும், சிசுவானது உருக்குலைந்ததாக இருந்து, பிறந்து வாழும் பாக்கியத்தைப் பெறினும், பெரும் அவஸ்தையுடனேயே வாழும் நிலைக்கு உட்படும் என்பது விஞ்ஞான பூர்வமான உறுதியாகக் கண்டறிய முடியும் நிலையிலும் கருவைச் சிதைக்க ஷரீஅத்தில் இடமுண்டு.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உண்மை தான். ஒரு மனிதனிடம் எத்துணை செல்வங்கள் இருந்த போதிலும் அவனிடம் ஆரோக்கியம் இல்லையென் றால் அத்தனை செல்வங்களாலும் அவன் விரும்பிய அளவு மன நிறைவாகப் பயனடையப் போவதில்லை. வைத்திய மும் பத்தியமும் தன் செல்வங்களை அனுபவிப்பதில் அவன் முன் முட்டுக் கட்டையாக வந்து நிற்கும். சுக வாழ்வை இஸ்லாம் இறைவனின் அளப்பரிய அருட்கொடையாகப் பார்க்கிறது.
நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ‘நிச்சயமாக செளக்கியமும் ஓய்வும் அல்லாஹ்வின் அருட்கொடைகளில் இரு அருட்கொடைகளாகும் மனிதர் களில் அதிகம் பேர் அவ்விரண்டிலும் ஏமாற்றப்பட்டுள்ளனர்’ (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹ¤ அன்ஹ¤) நூல் ஸ¤னன் அல்தாரமி)
ஆரோக்கியத்தை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒன்று அவனிடத்தில் கேட்கப்படவில்லை எனவும் ரஸ¤ல் (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) நவின்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல் லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹ¤ அன்ஹ¤மா) நூல் ஸ¤னன் அல்திர்மிதி)
ஆரோக்கிய வாழ்வே அனைவரதும் விருப்பம் நோய்நொடியை எவரும் விரும்பார். காசு, பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீடு வாசல் இல்லாவிட் டாலும் பரவாயில்லை. கை கால்களை வீசி, நீட்டி திடகாத்திரமாக இருந்தால் அவ்வளவு போதும் என கூறுவோரை நாம் பார்க்கின்றோம் அல்லவா!
ஆரோக்கியத்தின் அருமை பிணியின் போது தான் நன்கு புரியும் ‘அருட் கொடையின் பெறுமதி அது நீங்கிய பின்னராம் என்பது சான்றோர் வாக்கு. சில நோய்கள் ஓரிரு நாட்களில் குண மடையும் சில நோய்கள் குணமடைய பல நாட்கள் எடுக்கும் இன்னும் சில நோய்கள் மருத்துவ உலகின்படி அறவே சுகப்படுத்த முடியாதவை. மனிதனை நிரந்தரமாக்கப்படுக்கைக்கு தள்ளிவிடக் கூடிய நோய்களும் உள்ளன. பயங்கர ஆட்கொள்ளி நோய்கள் வேறு உள்ளன.
வியாதி பீடித்த பின் சிகிச்சை செய்வது பற்றி யோசிப்பதை விட நோய் வராமல் காத்துக்கொள்வது புத்திசாலித் தனம். வெள்ளம் வரு முன் அணை கட்டு என்பர். தடுத்துக்கொள்வது குணப்படுத்துவதை விட சிறந்தது என்றும் கூறுவர்.
சுத்தம் பேணல், ஆரோக்கியமான சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல் தேகப்பயிற்சி செய்தல் என்பன மிக மிக முக்கியமானவை. அலட்சியம் செய்ய முடியாதவை. நோய் நொம்பலம் வந்த பின் மருந்தென்றும் மருத்துவ ரென்றும் மருத்துவமனையென்றும் மாய்ந்து மாய்ந்து ஆயிரமாயிரமாய் அள்ளி அள்ளி இரைப்பதைவிட சுத்தம் பேணுவதில் ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவு உண்பதில் தேகப்பியாசம் மேற்கொள்வதில் சிரத்தை எடுப்பது சில நூறு ரூபாய்களை செலவு செய்வது மேலானது அறிவுபூர்வமானது ‘சுத்தம் சுகம் தரும்’ வேலைக்கு ஆட் களைச்சேர்க்கும் போது கூட தேகாரோ க்கியம் முக்கியமாக கவனத்திற்கொள் ளப்படுகிது.
பிணியுள்ள உடம்பு பணி புரிய உதவாது என்பதனால் தான் நோஞ்சானிடமிருந்து பெரிதாக என்ன எதிர்பார்க்க முடியும்? நசல்காரரின் மன நிலை கூட சீராக இருக்குமென எதிர் பார்ப்பதற்கில்லை ‘ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடம்பிலுள்ளது.
நோயற்ற வாழ்வை வேண்டி அல்லாஹ் விடம் நாம் பிரார்த்திக்க வேண்டியுமு ள்ளது. அப்பாஸ் (ரழியல்லாஹ¤ அன்ஹ¤) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் பிரார்த்திக்கக்கூடிய ஒன்றை எனக்கு கற்றுத் தாருங்கள் என்றேன்.
மன்னிப்பை யும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ் விடம் கேட்பீராக என்றார்கள். பின்னர் பிறிதொரு தடவை அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் பிரார்த்திக் கக்கூடிய ஒன்றை எனக்கு கற்றுத்தாரு ங்கள் என்றேன் அப்பாஸே! அல்லாஹ் வுடைய தூதரின் தந்தையின் சகோதரரே இம்மையிலும் மறுமையிலும் ஆரோக் கியத்தை அல்லாஹ்விடம் கேட்பீராக என்றார்கள். (நூல் : முஸ்னது அஹ்மத்)
இன்றைய நாட்களில் முன்னொரு போதும் இல்லாதவாறு நோயாளிகளின் எண்ணி க்கை தினசரி அதிகரித்து வருகிறது. வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிணியாளரில்லாத மனை ஒன்றை, குடும் பம் ஒன்றைக் காண்பது வெகு கடினம். சாப்பாடு போல் ஒளடதத்தையும் உள் ளெடுத்து வாழ்வோர் ஏராளம் இது ஏன், எப்படி எதனால் என்றெல்லாம் நாம் ஆய்ந்தோய்ந்து பார்க்கின்றோமா? மருந்து சிகிச்சை பற்றி அப்பப்பா மயிர் பிளக்கும் ஆய்வுகள் கருத்தரங்குகள், மாநாடுகள் ஆனால் வியாதி வராது தடுப்பதற்கு என்ன முயற்சிகள், முனைவுகள்? மொத் தத்தில் நசல் பிடித்து நலிந்து போன ஒரு சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.
சுகம் இருந்தால் தான் உடம்பில் தெம்பு இருக்கும் சுறுசுறுப்பாக இபாதத் களில் ஈடுபடலாம் ஓடி ஆடி உழைக்க லாம் துடிப்புடன் சேவைகள் புரியலாம் துணிச்சலுடன் சவால்களை எதிர்கொள் ளலாம். துவண்டு போகாது சோதனை களுக்கு முகம் கொடுக்கலாம். வீரத்து டன் சாதனைகள் நிலைநாட்டலாம் ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்’