Category Archives: கவித்தூறல்கள்

என் கவிதை

அழும் வயிறு..

அழுக்கு ஆடையும்;

வறட்சிச் சிகையும்;

ஏழ்மைக்கு

உரிமையாளனாய்

ஏழை என்றப் பெயருடன்!

அழும் வயிறுக்கு

ஆதரவாய்

விழிகள் விசும்ப;

குடலில் உலைக் கொதிக்க;

பாதம் இரண்டும்

படுக்கையைத் தேடும்!

எச்சம் கொண்ட

மிச்ச உணவை

வீசுவதற்கு முன்;

வீதியில் பாருங்கள்;

வக்கற்று வயிற்றில்

பசி சுமந்து;

என்னைப்போல

எவருமுண்டா என்று!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/20 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

நொறுங்கும் மனம்…

அத்தா என்ற

வார்த்தை மட்டும்

பரிட்சயமாய்;

வந்து நிற்கும் என்னை

வழிப்போக்கனாய் கண்டு

விழிப்பிதிங்கி

உதட்டைப் பிதுக்கும்

குழந்தை!

அத்தாம்மா

எனச் செல்லமாய்;

உன்னை அள்ள

நினைத்த எனக்கு;

உன் நகக்கீறல்கள்

பதக்கமாய்!

இப்பத்தானே;

வந்து இருக்குறாய் என

உறவினர்களின்

ஆறுதல் வார்த்தைகள்

அவமானமாய் எனக்கு;

அசடு வழியச்

சிரித்துவிட்டு;

அம்மாவிடம் கொடுக்க;

அடங்கிப்போகும்

உன் அழுகை!

வண்ண வண்ண

விளையாட்டுச்

சாமான்கள் காட்டி;

ஆசைத்தீர அழைத்துப்

பார்ப்பேன் உன்னை;

கரத்தில் உள்ள

பொருளை வாங்க

உன் தலை

அம்மாவிடம் திரும்ப;

என் மனம் நொறுங்க!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/20 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

பிரார்த்தனை..

கரங்களைச் சேர்த்து;

காய்ந்துப்போன

விழிகளை குளமாக்கி;

உள்ளம் நடுங்க;

தாடைகள் சிலிர்க்க;

முத்தமிடட்டும் விழி நீர்;

விழுதாய் விழட்டும்;

புறத்தில்!

சகோதரனின்

சதைக்கடித்துக்

கறைப்படிந்த நாவும்

வெட்கிப்போகட்டும்;

வஞ்சம் கொண்ட

நெஞ்சமும் பஞ்சாய்

போகட்டும்!

பாவத்தின் துர்நாற்றத்தை

முகர்ந்துப்பார்க்கச்

சந்தர்பத்தைத் தேடும்

வலுவிழந்த மனமும்;

மணம் வீசட்டும்;

மறையோனின்

மனம் குளிரட்டும்!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/20 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

வரம் தேடும் வயது..

தவறான உறவால்

கருவிலேக் காயமாக்கி

மாயமாக்கும் ஒரு கூட்டம்!

இளவயதுதானே என்று;

காலத்தைக் காலாவதியாக்க;

மாத்திரைக் கொண்டுப்

பேறு காலத்தை

மருந்து அடிக்கும்

ஒரு கூட்டம்!

எதிர்பார்க்கும் குழந்தைக்காக;

வருடத்திற்கு ஒருமுறை;

பள்ளிக்கூடமாகும்

வீட்டுக்கூடம்!

ஏக்கத்திலேத்

தூக்கத்தைத் தொலைத்து;

மழலைக்காக மன்றாடும்

ஒரு கூட்டம்!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/20 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

எதுவும் இல்லை..

கண்பார்வைக்குக்

கிட்டும்முன்னே;

கருவறையிலே

கரைந்தவர்கள் சிலர்;

மலரும்போதே

மரணம்

நுகர்ந்தவர்கள் சிலர்;

சிறகடிக்கும் வயதில்

சிறகொடிந்தவர் சிலர்;

போகின்ற வயதா எனப்

பட்டம் வாங்கியச் சிலர்;

தள்ளாத வயதில்

தடுமாறியவர்கள் சிலர்;

அழுகையோடு அவதானித்த

உன்னைக் கண்டு

ஆர்பரிக்கும் சிரிப்பொலிக்குப்

பெயர் உன் பிறப்பு;

உன் அழுகையோடு

உறவுகளையும்

அழவைத்த உனக்குப்

பெயர் இறப்பு!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/8 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

மூலையில் மூளை..

காரணத்தோடு;

சில நேரம்

காரியத்தோடு;

உள்ளம் வெடிக்க;

உதடுகள் துடுக்க;

உறவுகள் அறுபடும்!

முரண்டுச் செய்யும்

கோபத்தால்;

வாசலில் நிற்கும்

பழி உணர்ச்சி;

மூளையின் வேலைநிறுத்தப்

பணியால் முடங்கிப்போகும்

முதிர்ச்சி!

இரண்டு நிமிடச்

சண்டையால்;

இருதயங்கள் கனக்கும்;

இரத்தநாளங்கள் தவிக்கும்;

கெடு கொடுக்கும்

சினத்திற்குத் தடைவிதிப்போம்;

கடைக்கண் பார்வைப்பட்டால்

கதவடைப்போம்!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/8 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

பயம்..

சோறு

ஊட்டுவதிலிருந்து;

இரவு சொப்பனத்திற்குத்

தள்ளும் வரை;

தவறாமல் பயம் காட்டியேப்

பழக்கப்படுத்திய அன்னை;

மறுப்பேச்சு இல்லாமல்

மாக்கானுக்குப் பயந்து;

அம்மாவின் முந்தாணையில்

ஒளிந்துக்கொண்டு;

போர்வைக்குள் வீரமாய்;

விழிகள் மட்டும் ஈரமாய்!

தந்தியடிக்கும்

உள்ளத்தால்;

நொண்டியடிக்கும்

தைரியம்!

இமை மூடும்

இருளுக்காக;

இருள் கண்டால்;

பயத்தால்

இமைத்திறக்கும்;

பயம் வெடிக்கும்!

மிரட்சிக் கொடுத்தேக்

காரியம் சாதித்த அன்னை;

என் சிறுபிராயத்தில்;

இப்போது

நான் வளர்ந்தப் பின்னே;

வருத்தெடுக்கிறாள்;

ஆண்பிள்ளைகுப் பயமா!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/8 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜிஹாத்..

அநீதியின் கதவை

உடைத்து;

அப்பாவிகளின்

உயிருக்குக்

கரம் கொடுக்கும்;

ஆழமுள்ள வார்த்தைக்கு;

வர்ணமிட்டு;

கெட்ட எண்ணமிட்டு;

தவறாகத் தலையில்

ஏறியத் தலைப்பு!

உறவைக் காட்க

உயிரைக் கொடு;

சொந்தச் சொத்தை

மீட்க சாவைத் தொடு;

குண்டுவெடிப்பில்

குளிர்காயவில்லை;

அப்பாவிகளைக்

கொன்றுக் குவிப்பதைச்

சொல்லித்தரவில்லை;

உள்ளத்தை அறுக்கும்

கயமையை அறு;

நீதிக் கெட்ட அரசனிடம்

நியாயம் சொல்லும் கரு!

புரிந்துணர்வுப்

புண்ணாகியாதால்;

அழகான வார்த்தை

வன்முறையாக்கப்பட்டுள்ளது!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/6 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

மண்ணறை…

கட்டிப்பிடித்தச்

சொந்தங்கள் எல்லாம்;

உனை எட்டிவைத்து;

தொட்டுப்பார்த்து

அழுதுச் செல்லும்!

விலையுயர்ந்த

ஆடைகள்;

விலைப்போகாமல்;

வெள்ளை ஆடை

உனைக் கவ்விப்பிடிக்கும்!

ஆர்பரிக்கும்

அழுகைச் சத்தத்துடன்;

உறங்க உன்

இடத்திற்குச் செல்ல;

வழியனுப்பச் சொந்தங்கள்

கூட்டமாய்!

முதலீடுச் செய்த

நன்மைகளும்

தீமைகளும்;

மண்ணறையில்

காத்துக்கிடக்க!

பயணம்

முடியுமுன்னே;

பதிவுச்செய் உன்

இருப்பிடத்தை;

கண்ணீரைக் காணாத

உன் கண்களைக்

கசக்கி அழு பாவத்திற்காக!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/5 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொய் சொல்லலாம்…

பாசத்தைப் பிழிந்துச்;

சமையல் நீ செய்ய;

சொல்பேச்சிக் கேட்காமல்

புளிப்பும் உப்பும்;

சுவையைக் கூட்ட;

சினத்தை என் முகத்தில்

காட்டாமல்;

சிரித்துக்கொண்டேச்

சொல்லலாம் பொய்;

நல்லாயிருக்கு என்று!

பிடிக்காத வண்ணத்தில்;

உனக்குப் பிடித்த

எண்ணத்தில் சட்டையை

என் நெஞ்சில் ஒற்றி;

அழகாயிருக்குல்ல எனும்போது;

சிரித்துக்கொண்டேச்

சொல்லலாம் பொய்;

நல்லாயிருக்கு என்று!

முன்பே

முடிவெடுத்துவிட்டு;

ஒப்புக்காக என் பதிலை

நீ கேட்கும் போது;

சிரித்துக்கொண்டேச்

சொல்லலாம் பொய்;

சரிதான் என்று!

எனக்காகவே

என்னோடு நீ

ஒட்டியிருக்கும் போது;

உனக்காக;

உதடுகளைப் பிரிப்பதில்

தவறில்லை;

பொய்யென்றாலும்!

-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ

2011/2/5 yasar arafat

அஸ்ஸலாமு அலைக்கும்,

உழைத்த உன் பாதம்..

உழைத்துத்

தோய்ந்துப்போனப்

பாதங்கள் இன்னும்

ஒயாமல்;

புரண்டுப் படுத்துக்;

கட்டில் முரண்டிப்பிடித்து

எழுப்பிவிடும் என்னை;

தோளுக்கு மேல்

வளர்ந்த என்னை – உன்

பாதம் பிடிக்க;

அழைக்காமல் – நீங்கள்

அடம்பிடிக்க!

உறுத்தும் நெஞ்சத்தோடுக்;

கரத்தில் தைலத்துடன்;

தேய்த்தச் சந்தோஷத்தில்

நிம்மதியாய் உறங்குவேன்;

நான்!

வலித்தாலும் நான்

தேய்த்துவிட்டச் சந்தோஷத்தில்

நிம்மதியான உறக்கத்தில்

நீங்கள்!

சாதனைப் பக்கம்

எத்தனை எதிர்பார்ப்புகள்

இதயத்தின் ஓரமாய்…

விடியலின் அத்திவாரம் முதல்

அஸ்தமனத்தின்

அறுவடை வரை…

வாலிப நெஞ்சங்களும்

இதே மரநிழலில் தான்

ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றனர்

ஆனாலும்

களைப்புகள்

உணரப்படுவதில்லை.

ஒரு மயான வீதியைப் போல்

மனம் அமைதியாயிருக்க

ஆந்தையின் அலறலும்

அழகிய கவிதையாகும்…

நீண்ட பெருமூச்சுக்கள்

சுகமானதாகவே தெறிக்க

சொந்தக்காலில் நிற்க வேண்டும்

என்ற துடிப்பு…

எல்லோருக்குள்ளும்

ஏதோ சொல்ல முடியாத

சந்தோஷம்…

கவலை…

கனவு…

நிம்மதி…

னைவுகள்…

நிஜங்கள்…

ஆசைகள்…

துடிப்புகள்…

இருக்கத்தான் செய்கிறது

வாழ்வை வளையமிட்டபடி…

இயற்கைக் காற்றில்

இலவசமாய் சுகம் அனுபவிக்கும்

சுகம்

இறைவன் கொடுத்த வரம்…

ஏனோ சில வேளைகளில்

மரணத்தின் மடியில் துயில நினைத்தாலும்

துடித்தெழத் தோன்றும்

ஒரு சின்ன வசந்தத்திற்காக வேனும்

விரிந்த வானத்தில்

விழிகள் தொலைகையில்

சில நட்சத்திரங்களையும்

களவாடச் சொல்லும் வயது

சாதனையாளனாக இருந்தால்

ஒரு நட்சத்திரத்தை சமைத்து

வானில் வீடுகட்டச் சொல்லும் மனது…

உண்மை வெற்றி

எதுவென்றால்

இதய சாம்ராஜ்யத்தை நாமே ஆளும்

நம்பிக்கைதான்

எப்போதும்…