Category Archives: History – வரலாறு

வெறுமனே அழைப்பிதழ்களில் போடுவதற்கும்..,

புலம் பெயர்தலின் புனித வரலாறு!

வெறுமனே அழைப்பிதழ்களில் போடுவதற்கும்.., பீடை மாதம் உள்ளிட்ட அநாச்சார வகையிலான
ஹிஜ்ரத் படிப்பினைகள்:

ஹிஜ்ரத் படிப்பினைகள்:

மூடப்பழக்கங்களை வெளிப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய புத்தாண்டின் மகத்துவம் என்ன..? புலம்பெயர்தலின் உன்னத வெளிப்பாட்டை படம் பிடித்துக் காட்டும் இந்த வரலாற்று நிகழ்வை அறிவது மிக முக்கியம்!
ஹிஜ்ரத் படிப்பினைகள்:
ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் ‘ஹி’ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.
Continue reading

வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு!

ரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.

“ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்” என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் “வரலாற்று வரைவியல்”(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய

Continue reading

கண்ணீர்க் கரைகள்..!

அன்சாரியைத் தேடி ஒரு பகல்

கும்பிடும் கைகள்குத்புதீன் அன்சாரி என்பது அந்தக் கும்பிடும் கைகளுக்குச் சொந்தக்காரரின் பெயர். ஒரு ஏழைத் தையல்காரர். மும்பையிலும் மாலேகாவிலும் கொல்கத்தாவிலும் அகதியாக அலைந்த பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, அந்த நகரத்திலெங்கோ ஒளிந்து வாழ்பவர். அகமதாபாத்தை அடைந்தபோது கையிலிருந்த தகவல்கள் இவ்வளவுதான்… …

நன்றி : கெ.மோகன்லால், தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா; பதிப்பு : உயிர்மை

கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும் அமெரிக்கா!

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதாவது தாங்கள் இறைநேசர்கள் என்பதற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர், பின்னர் தான் தாங்கள் வாழக்கூடிய நாட்டை குறிப்பிடுகின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.
மேற்கொண்டு பதிவிற்கு..

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்!

பகுதி – 1

Niram

 

“(ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய) மத்தியக் கால இந்திய வரலாறு, இந்து குடிமக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் நிறைந்ததாக இருந்தது; இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் பெரும் அவமதிப்பிற்கு உள்ளானார்கள். (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்) சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் பொதுவான அம்சங்கள் எதுவுமே இல்லை.” – இத்தகையப் பொய்களும் புனைந்துரைகளும் ஆங்கிலேயர்களால் இந்திய வரலாற்றுப் பாட நூற்களில் திட்டமிட்டு வலிந்து திணிக்கப் பட்டன.பேராசிரியர் பி.என். பாண்டே பாராளுமன்ற மேல்சபையில் 29 ஜூலை 1977-ல் ஆற்றிய உரையிலிருந்து…

பேராசிரியர் டாக்டர் பி.என்.பாண்டே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்; 1983-லிருந்து 1988 வரை ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தவர்; பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்; சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக சுமார் 45 புத்தகங்கள் எழுதியிருப்பவர்.

Continue reading