அவளுக்கென்று ஒரு தினம்..! அவளுக்காக இல்லை ஒரு தினம்..!!

1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

-மு.அ. அப்துல் முஸவ்விர்

மார்ச் 8! சர்வதேச மகளிர் தினம்! 1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!சற்று பின்னே பயணிப்போம்! 1996-ஆம் ஆண்டு தேவே கவுடா, பாரதப் பிரதமராக இருந்தபோது, முதன் முதலில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியாமற் முடக்கப்ட்டது. பின்னர், 1998,1999,2002,2003,2008 என்று பல முறை

இன்று சர்வதேச அரபிமொழி தினம்..!

இன்று சர்வதேச அரபிமொழி தினம்
இன்று சர்வதேச அரபிமொழி தினம்

டிஸம்பர் 18:இன்று சர்வதேச அரபிமொழி தினம்..!அரபு எழுத்துகள் அல்லது அரபு அரிச்சுவடி என்பது அப்ஜதிய்யா அரபிய்யா என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்துமுறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எழுத்துமுறை உலகில் இரண்டாம் மிகப் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை ஆகும்.[1] முதலாக அரபு மொழியை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் விரிந்து அச்சமயத்தின் தாக்கம் காரணமாக இஸ்லாம் உலகில் பல்வேறு மொழிகளின் பேசுவோர் அரபு எழுத்துமுறையை பின்பற்றியுள்ளனர். அரபு மொழி சேர்ந்த செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேராத பாரசீகம், உருது, ஹவுசா, பாஷ்தூ, மலாய், பிராகுயி, சிந்தி போன்ற மொழிகளை பேசுவோர் சிறிய மாற்றங்களை செய்து இந்த எழுத்துமுறையை தனது தாய்மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்தியுள்ளன.

இந்த எழுத்துமுறை முதலில் அரபு மொழி நூல்களையும், அதுவும் குறிப்பாக திருக் குர்ஆனையும், எழுதப் பயன்படுகிறது. பின்னர் இசுலாம் மதம் பரவிய பின்னர் பல மொழிக்குடும்பங்களில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்களையும் எழுதப் பயன்பட்டது. இம்மொழிகளில் பாரசீக மொழி, உருது, பஷ்து (Pashto), பலோச்சி (Baloch), மலாய், கிசுவாகிலி, பிராகுயி, காசுமீரி, சிந்தி, பால்ட்டி, பாக்கிஸ்தானிய பஞ்சாபி, சீனாவின் சிஞ்சியாங் மாநிலத்தில் பேசப்படுகின்ற உய்குர், கசக், உசுபெக்கு, இலங்கை, தென்னிந்தியா மற்றும் சில நாடுகளிலுள்ள அர்வி, ஆப்பிரிக்காவில் மாண்டிங்கா, ஃவுல்ஃவ்வுல்டி-புலார், ஔசா முதலியவும், குர்திசுத்தான், பெலாரூசியன் தார்த்தார், கிர்கிசுத்தான், உதுமானிய துருக்கியம், போசினியாவில் செர்போ-குரோசியம், இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் உள்ள ஆச்சே மொழி ஆகிய நில-இன மக்கள் பேசும் மொழிகள் உட்பட வேறு பல மொழிகளும் அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.

அரபு எழுத்துகள் மொத்தம் 28. ஆனால் அவை முதலெழுத்தாகவும், சொல்லின் இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது வடிவங்கள் மாறுபடுகின்றன. அரபு எழுத்து முறையைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகின்றது. அரபு வலமிருந்து இடமாகப் படிக்கும் மொழி. ஆகவே முதல் எழுத்து என்பது வலது கோடியில் உள்ளது. கடைசி எழுத்து என்பது இடது கோடியில் உள்ளது. வேறு மொழிகளில் கூடுதலாக சில எழுத்துகள் உள்ளன. உயிரெழுத்துகளை கட்டாயமாக எழுத வேண்டம் என்பதால் அரபு எழுத்துமுறை ஒரு அப்ஜத் வகை எழுத்துமுறையாக பிரிந்து கொண்டு இருக்கிறது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து…!

இன்று சர்வதேச ஆடவர் தினம்..!

மனிதம் மதிப்போம்..!இன்று சர்வதேச ஆடவர் தினம்..! உண்மையான ஆண்மைத்தனம் ஆதிக்கத் தோரணையில் இல்லை..!இறைநம்பிக்கையின் உன்னத தாத்பர்யத்தில்.., அழகிய ஆளுமையில்..., தன்னம்பிக்கைத் திடலில்.., அன்பின் ஆர்ப்பரிப்பில்.., மகளிரின் மதிப்பில்..,
மனிதம் மதிப்போம்..!இன்று சர்வதேச ஆடவர் தினம்..! உண்மையான ஆண்மைத்தனம் ஆதிக்கத் தோரணையில் இல்லை..!இறைநம்பிக்கையின் உன்னத தாத்பர்யத்தில்.., அழகிய ஆளுமையில்…, தன்னம்பிக்கைத் திடலில்.., அன்பின் ஆர்ப்பரிப்பில்.., மகளிரின் மதிப்பில்..,

மனிதம் மதிப்போம்..!இன்று சர்வதேச ஆடவர் தினம்..! உண்மையான ஆண்மைத்தனம் ஆதிக்கத் தோரணையில் இல்லை..!இறைநம்பிக்கையின் உன்னத தாத்பர்யத்தில்.., அழகிய ஆளுமையில்…, தன்னம்பிக்கைத் திடலில்.., அன்பின் ஆர்ப்பரிப்பில்.., மகளிரின் மதிப்பில்.., மழலையின் மாசு மருவில்லா மரியாதையில்.., அனைத்துக்கும் மேலாக இறுதித்தூதரின் முன்மாதிரி வாழ்வை வலிந்து சென்று வரவேற்பதில்.. உள்ளது..!

உயிருக்குப் போராடும் பெண் கைதி…!

ஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பெண் கைதியான லீனா ஜெர்பூனி கடுமையான உடல்நலக் குறைவால் தற்போது உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கின்றார் என பலஸ்தீன் கைதிகள் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கல்லீரலில் கட்டி ஒன்று உருவாகி, அது பெரிதாய் வளர்ந்துள்ள நிலையில் மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணிக்கு, ஆக்கிரமிப்புச் சிறை வைத்தியசாலை மருத்துவர்கள் போதிய மருத்துவ சிகிச்சை வழங்காமல் தொடர்ச்சியாகப் புறக்கணித்துவருகின்றனர்.

இதனால், இவர் சுமார் 20 கிலோ கிராம் எடை இழப்புக்கு உட்பட்டு தற்போது மிக மோசமான உடல்நிலையுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார். மிக விரைவாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு கட்டி அகற்றப்படாவிட்டால், அவர் உயிரிழக்க நேரலாம் என பலஸ்தீன் கைதிகள் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தம்முடைய சக கைதியின் நோய் உபாதையைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாத மற்ற பலஸ்தீன் பெண் கைதிகள் யாவரும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தை அச்சுறுத்தியதை அடுத்து, லீனா ஜெர்பூனி 1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசத்தில் அமைந்துள்ள மீர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.என்றபோதிலும், மிக மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு பெண் நோயாளி

Continue reading உயிருக்குப் போராடும் பெண் கைதி…!

இலைகள் உதிர்வதை கண்டு…!

தமிழர்கள் மீதான இனரீதியான போர்க்குற்றங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாண தெருக்களில் தமிழர்களின் நிலை குறித்த நெடுந்தீவு முகிலன் என்பாரின் ஒரு சிறு இடுகை, உண்மையைப் படம் பிடித்துக் காட்டியது!இனரீதியான வெறித்தனம் மனிதஇனத்தை எந்த அளவுக்கு பாதிப்படையச் செய்கின்றது என்பதற்கு இந்த சிறு வரிகள் போதும்.. விளக்கப்படுத்த..!

இலைகள் உதிர்வதை கண்டு

மரங்கள் அழுவதில்லை
Continue reading இலைகள் உதிர்வதை கண்டு…!

சறுக்கினார் சர்கோசி..!

எப்போது பார்த்தாலும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கும் சர்கோசி ஃப்ரான்ஸ் தேர்தலில் மண்ணைக் கவ்வினார்..!பிரான்ஸ் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்

Continue reading சறுக்கினார் சர்கோசி..!

உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்!

SportyBoyGapKidsலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.

சிறுவர் துஷ்பிரயோகம்:

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர்

Iraqi_boys_giving_peace_signதுஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன. இது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட

Continue reading உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்!

ஐக்கியநாடுகள் சபை தலைமையகம்: துபாய்க்கு கொண்டுவர முயற்சி

துபாய்:2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்ததோடு அதனை துபாய்க்கு

dubai-towersமாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய்
அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கு எளிதில் செல்வதற்கான இடமாக இருக்கவேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும். ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்க தாங்கள் தயார் என்று துபாய் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை துபாய் அரசு மீடியா அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா அதிகாரிகளை அழைத்துள்ள துபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.

பூகோள அமைப்பில் துபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம், உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழி, விமான வழி, சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.

உலக சமாதானத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஐ.நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் ஐ.நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக ஐ.நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் “யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி” துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்