மகனே நீ என்னை சுமப்பாய் என்று நான் உன்னை “என் கருவறையில் சுமக்கவில்லை”
நீ அயல் நாட்டிற்கு சென்றாலும் இந்த உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் “முப்பொழுதும் உன் கற்பனைகள் தான் என் செல்வமே”..!
அழைப்புமணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேனடா..!
நீ எந்தன் வாசல் தீண்டாவிட்டாலும் என் கண்கள் உனக்காக வெந்நீரை வார்க்குமடா..!
நீ உன் வீட்டில் என்னை வைத்து இருந்தாலும் இல்லை முதியோர் இல்லத்தில் கொண்டு போட்டாலும் நீ என் மகன் நான் உன் தாய் இதை யாரும் அழித்து விட முடியாது…!
என் முகத்தில் உள்ள அத்தனை சுருக்கங்களும்ஒவ்வொன்றும் உனது நினைவுகளையே நினைவு கூறும்…!
நான் உன்னை என் வயிற்றில் சுமக்கும் போது என் நிழலை கூட மற்றவர்களை மிதிக்க விட மாட்டேன் ஏனென்றால் அந்த நிழலும் நீ நிஜமாய் இருப்பதை உணர்கிறேன்…!