23 முறை கேட்ட கேள்வி!

23 முறை கேட்ட கேள்வி!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.


இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும்.

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

நிழல் தந்த மரம்!

நிழல் தந்த மரம்!

தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.
காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன் சொன்னான், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை.”
அந்த மரம் சொன்னது, “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்.”
அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.
சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.
அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது.”
அந்த மரம் சொன்னது, “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்.” அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.
நீண்ட காலம் கழித்து அந்த இளைஞன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது அவன் இளைஞனல்ல. மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.”
அந்த மனிதன் விரக்தியாக சொன்னான், “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?”
மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.
இந்த கதையை படிக்கும் நாம் அந்த சிறுவன் எத்தகைய கொடூரமான சுயநலவாதியாக இருந்திருக்கிறான் என அவன் மேல் கோபமடைவோம். கொஞ்சம் பொறுங்கள்! ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!
மரம் என உருவகமாக சொல்லப்பட்டது நமது பெற்றோர்களைத்தான் என கொண்டு சற்று யோசனை செய்து பாருங்கள்!
நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம்.
அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பாசமிகு பெற்றோர் நமக்காக நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான். இதை நாம் சரியாக உணர்ந்து கொண்டிருக்கிறோமா?
உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் “சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:23,24)

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால்….!

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

பதிவுசெய்யப்பட்டுள்ளது

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.

ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.

இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் ‘எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை’ என்று குறிப்பிட்டார். 

மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.

 
டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் ‘பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன’ என்று கூறினார்.

‘நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.‘ என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.

மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.

62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் ‘எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்’ என்றும் தெரிவித்தார்.

ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.

‘ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!‘ என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 
தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது ‘இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 
 

இயேசு கிறிஸ்து: ஒரு உண்மை விளக்கம்

K];ypk;fshy; kwf;fg;glLk; kw;wtu;fshy; Kw;wpYk; jpupj;Jf; $wg;gl;Lk; tUfpdw ,];yhj;jpd; rpy tp\aq;fspy; ,NaRtpd; gpwg;G gw;wpaJk; xd;W! mJ Fwpj;j cz;ikahd Tpsf;fq;fisj; je;jpl Ntz;Lk; vDk; Nehf;NfhL ,e;E}y; ntspaplg;gLfpd;wJ. ve;j xU juggpdiuAk; ………

 

 

 

http://www.ipc-kw.com/up/files/11-1213863170.pdf