நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.

குர்பானீ..!

கூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வா

நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.

நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.

றே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்குக் கீழ்ப்படிவோரில் (முஸ்லிம்களில்) முதன்மையானவனாக உள்ளேன்.” மேலும் கூறுவீராக: “அல்லாஹ்வே அனைத்திற்கும் அதிபதியாக இருக்க, அவனை விடுத்து வேறொரு அதிபதியை நான் தேடுவேனா? மேலும், எவரெவர் எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்ப வேண்டியுள்ளது. அச்சமயம் நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதன் உண்மை நிலையை அவன் உங்களுக்கு வெளிப்படுத்திவிடுவான். உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கியவனும் அவனே! உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக! நிச்சயமாக உம் அதிபதி தண்டனை வழங்குவதில் விரைவானவன்; மேலும் நிச்சயமாக அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கின்றான்.6:162 -165

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது.

இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.

இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.

அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான்.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” (37:100-111)என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

அல்குர்ஆன் (37 : 100)

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.

இறைமாறிலிருந்து விலக்கம்..! புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..!!

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.

– மு.அ.அப்துல் முஸவ்விர்
வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல. தனது குளிர்நிழலை இறைஉவப்புக்காய் நோன்பு பேணும் மாந்தர் மீது தாரை வார்த்து அவர்தம் வாழ்வை இறைமாறிலிருந்து நீக்கி, இறைஉவப்பின்பால் சாயச் செய்யும் உன்னத மாதம் இது!இறைக்கட்டளையை அழகாய்ப் பேணி,மறுமையில் ஏகஇறையிடமிருந்தே நேரடியாக நற்கூலி பெறும் அருட்பேறுக்கான வழிமுறையாக இருக்கும் இம்மாத நோன்பு நம்மை இறைமாறிலிருந்து விலக்கச் செய்யட்டும்.இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்!
இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி இருத்தலே, புனித ரமளானில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய அம்சமாகும்.
இறையச்சத்தை ஏற்படுத்துவதும் அதனைச் செழித்து வளரச் செய்வதும்தான் நோன்பின் முதன்மையான நோக்கமாகும்.இறையச்சம் செழித்து வளர்கின்ற வசந்த காலம்தான் ரமளான் மாதம்!எனவே.இந்த மாதத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதிலிருந்து விலகியிருப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
ரமளான் அல்லாத மற்ற மாதங்களின் இரவுகளிலும் பகல்களிலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதற்கு பொருளல்ல!
ரமளானில் திருக் குர்ஆனுடன் நமக்கிருக்கின்ற உள்ளார்ந்த தொடர்பு வலுப்படுவதாலும் இறைக்கட்டளைகளின்படிச் செயல்பட வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்துடன் பகற்பொழுது முழுவதும் பசித்திருப்பதாலும் தாகித்திருப்பதாலும், அதன் பிறகு இரவுகளில் நீண்ட நேரம் நின்று சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவதாலும், அந்தத் தொழுகையின்போது இறைமறை ஓதப்படுவதைக் காதார கேட்பதாலும் ஒரு தனிச் சிறப்புமிக்க உணர்வும் சூழலும் பூக்கின்றது.
இறைப்பற்றின் மணம் கமழ்கின்ற இந்த இனிமையன சூழலில் இறைவனின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் இட்டுச் செல்கின்ற யாதொன்றையும் விட்;டும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வு, ஆழமும் வலிமையும் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்பதால்தான் இங்கு இந்த விஷயம் குறித்து அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது.
வாழ்வின் எல்லா விவகாரங்களிலும் இறைவனுக்கு மாறு செய்வதைவிட்டு விலகி இருத்தல் அவசியமாகும். ஆனால், குறிப்பாக, மற்ற மனிதர்களுடன் நமக்கு இருக்கின்ற தொடர்பு விஷயத்திலும், பிற சமூக உறவுகளிலும் கூட்டு ஒழுக்கம் பற்றிய விவகாரங்களிலும் இந்த கோணத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
ஒருவர் மிகுந்த பேணுதலுடன் நோன்பு நோற்கின்றார்.ஒரு வேளை விடாமல் தொழுகின்றார்.ஆர்வத்துடன் தானதர்மங்களையும் செய்கின்றார்.நாள்தோறும் திருக் குர்ஆன் ஓதுகின்றார்.எல்லாமே செய்கின்றார்.ஆனால், மறுமை நாளில் எந்த நிலையில் வருகின்றார் எனில், முதுகு முறிகின்ற வகையில் மற்றவர்களின் முறையீடுகளையும் புகார்களையும் சுமந்துகொண்டு வருகின்றார்.ஏன் அப்படி..?
எவரையாவது அடித்திருப்பார்,எவரையாவது திட்டியிருப்பார்,எவரையாவது அவமதித்திருப்பார்,எவருடைய மானத்திலாவது கை வைத்திருப்பார்,எவருடய மனத்தையாவது புண்படுத்தியிருப்பார்,எவராவது ஒருவரின் பொருளைத் தின்றிருப்பார்.அவரால் பாதிக்கப்பட்ட எல்லாரும் அவருக்கு எதிராக முறையிடுவார்கள்.அந்த முறையீடுகளும் புகார்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால்தான், அந்தச் சுமை அவருடைய முதுகை முறிக்கின்ற அளவுக்கும் இருக்கும்!
இத்தகைய நபருக்கு என்ன நேரும்?
அவருடைய வணக்கங்கள்,அவர் செய்த நன்மைகள் எல்லாமே அவரால் உரிமை பறிப்புக்கு ஆளாகி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டுவிடும் என்றும், இவ்வாறாக, அவருடைய நன்மைகள் எல்லாமே பகிர்ந்து கொடுக்கப்பட்ட பிறகும்கூட, அவர் செய்த அக்கிரமங்களால் பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் முடியாமல் போகும்போது, பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் அவருடைய கணக்கில் சேர்க்கப்படும் என்றும் இறுதியில் அவர் முகங்குப்புற நரகத்தில் வீசியெறியப்படுவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்; முஸ்லிம்
நோன்பு கடமையாக்கப்படுகின்றது என்கின்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள வசனத் தொடரை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.நோன்பின் மூலமாக அடைய வேண்டிய அடிப்படை நோக்கங்கள் இவைதான் என்று உங்களுடைய மனம் உரத்துச் சொல்லும்.
முதலில், மனித உயிரின் மாண்பு குறித்தும் கொலை வழக்குகளில் பழிவாங்கல் (கிஸாஸ்) குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.பிறகு சொத்தைப் பிரிக்கும்போதும் வஸிய்யத் (மரணசாஸனம்) எழுதும்போதும் நீதி-நியாயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வஸிய்யத்-தைக் கட்டாயமமாக எழதியே ஆக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.அதன் பிறகு நோன்பு,ரமளான் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.அதற்கடுத்த அதே மூச்சில் ஒருவர் மற்றவரின் பொருள்களை அநியாயமான முறையிலும் அசத்தியமாகவும் தின்றுவிடாதீர்கள் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.அதன் பிறகு சில வெளிப்படையான சடங்குகளைப் பின்பற்றுவதுதான் இறைப்பற்று அல்லது புண்ணியம் என்பதல்ல, இறைவனுக்கு அஞ்சி நடந்துகொள்வதுதான் உண்மையிலேயே விரும்பத்தக்கதாகும் எனத் தெளிவுபடுத்தப்பட்டது.அதன் பிறகு இறைவழியில் போர் புரிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.அதேசமயம், இறைவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை என்பதால் போர் புரியும்போதும் வரம்பு மீறாதீர்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
சங்கிலித் தொடரைப் போன்று அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும் இந்தக் கட்டளைகளை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். இறைக் கட்டளைகளின் இந்த சங்கிலித் தொடரில் எந்த இடத்தில் ரமளான் நோன்பு பற்றிய கட்டளை பொருத்தப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாகப் புரியும். நோன்பு நோற்று முடித்த பிறகு மற்ற மனிதர்களின் உயிர்,உடைமை,உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் மீது கைவைப்திலிருந்து நீங்கள் விலகி இருப்பதும் அவசியமாகும் என்பது இதிலிருந்து தெளிவாகப் புலனாகும்.
இதனைத்தான், அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் பாவங்களிலிருந்து தப்பிக்க உதவுகின்ற கேடயம் போன்றது நோன்பு என்று வருணித்துளார்கள்.அதனைக் கேடயம் போன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நோன்பாளி கெட்ட வார்த்தைகளைப் பேசுவம் கூடாது.திட்டக் கூடாது.கூச்சலிடக் கூடாது.இரைந்து பேசவும் கூடாது.எவரேனும் ஒருவர் அவரைத் திட்டினாலோ அல்லது சண்டையிட வந்துவிட்டாலோ, ‘நான் நோன்பாளியாக இருக்கின்றேன்.என்னால் இந்தத் தீயசெயல்களில் ஈடுபட முடியாது’ என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகிவிட வேண்டும் என்றும் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்;: புகாரி, முஸ்லிம்
‘உணவருந்துவதையும் பருகுவதையும்விட்டு விலகி இருப்பதற்குப் பெயர் நோன்பு அல்ல! மாறாக, பொய்யையும் பொய்யான செயலையும் கைவிடுவதற்குப் பெயர்தான் நோன்பு’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இன்னொரு நபிமொழியில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்;: புகாரி
நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்! நோன்பு என்பது வயிற்றின் நோன்பு மட்டும் கிடையாது.கண்களுக்கும் நோன்பு உண்டு!காதுகளுக்கும் நோன்பு உண்டு!நாவுக்கும் நோன்பு உண்டு!கை-கால்களுக்கும் நோன்பு உண்டு!இறைவனுக்கு விருப்பமில்லாதவற்றையும் இறைவன் தடுத்துள்ளவற்றறையும் கண்கள் பார்க்கக்கூடாது என்பதுதான் கண்களுக்கன நோன்பு ஆகும். இதேபோன்று இறைவனுக்கு விருப்பமில்லாதவற்றையும் இறைவன் தடுத்துள்ளவற்றையும் காதுகள் கேட்கக் கூடாது, நாவு பேசக்கூடாது,உடல் உறுப்புக்கள் செய்யக் கூடாது என்கின்ற ரீதியில் மற்ற உறுப்புக்களுக்கான நோன்புகளையும் விவரிக்கலாம்.
அடுத்ததாக, உங்களிடம் இருக்கின்ற பலவீனங்கள்,குறைகள்,பிழைகள் யாவற்றையும் பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாகக் களைவதற்கும் துறப்பதற்கும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் முயலுங்கள். இந்த விஷயம் சிறியதுதான் என்றாலும் இவற்றின் மூலம் மிகப்பெரும் பணியைச் சாதிக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, நாவடக்கத்துடன் தொடங்கலாம்.இனி, ரமளான் மாதத்தில் எவரையும் இரைந்து பேசமாட்டேன்.யாரிடமும் சண்டை போடமாட்டேன்.எவரைக் குறித்தும் புறம் பேச மாட்டேன்.அவருக்கு முன்னாலும் புறம் பேசமாட்டேன்,அவருடைய முதுகுக்குப் பின்னாலும் புறம் பேச மாட்டேன். நன்மையானவற்றைத் தவிர வேறெதனையும் சொல்ல மாட்டேன்.கெட்ட வார்த்தைகளை சொல்லேன்,கேலி செய்யேன் என்கின்ற ரீதியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.இது சிரமமாகத் தேன்றலாம்.ஆனால், தொடர்ந்து பயிற்சி செய்தால் இது மிகவும் எளிதாககிவிடும்.
நாள்தோறும் இரவு படுக்கப் போகின்ற வேளையில் இது குறித்து சுயமதிப்பீடு செய்யுங்ள்.ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால் உடனடியாக பாவமன்னிப்புக் கோருங்கள்.
புனித ரமளானைப் பயன்படுத்தி வரக்கூடிய ஏனைய பதினோரு மாதங்களையும் உங்களுடைய இறைவிருப்ப வாழ்வுக்கான களமாக ஆக்கிக் கௌ;ளுங்கள்! இறையருள் உங்களுக்குத் துணை நிற்கட்டும்!

 

றத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!

நிராகரிப்பின் நாசத்திலிருந்து.., நம்பிக்கையின் நிழல் வரை..!

றத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!

றத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!

மு.அ.அப்துல் முஸவ்விர்
புறத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!சத்தியமும் அசத்தியமும் இருவேறு திசைகள்! அசத்தியப் போக்கு மனிதனை அதளபாதாளத்தில் வீழச் செய்யும்.சத்தியப்போக்கு, சாம்ராஜ்யங்களின் சகலகலாவல்லவனாக அவனை ஆக்கும்!இறைசந்நிதியில் வேறுபாடில்லா சமத்துவங்களே, இஸ்லாமிய கவுரனீய வாழ்வைப் பெற்ற ஒரு சராசரி மனிதனின் சத்தியத்தின்பால் திண்மைத்தழுவல்களும்,கற்றறிந்த ஆன்றோரின் ஏகஇறைபால் சாய்வும்! எனினும், மனப்பிறழ்ச்சிக்கு மருத்துவம் கண்டுவந்த மனோதத்துவ விஞ்ஞானி ஒருவரின் மனம், ஒரு யுககால தேடலின் பின்னர், ஏக இறைபால் ஆகுமாக பிறழ்வது வருங்கால வரலாறு!
ஏறக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன்னர் கண்ட அதே மனிதரா இவர்..? கனல் கக்கும் பார்வையும், வெட்டு ஒன்று.., துண்டு இரண்டாகப் பேசி நேரடியாக விஷயத்தக்கு வரும் மனோபாவமும் பெற்ற பேராசிரியரா இவர்..? வளைகுடா நாட்டின் அனல் காற்றுச்சூழலினூடே, பாலைவனச் சோலை எனும் பெயரிடப்பட்ட அந்த தங்கும் விடுதி அறையின் இரம்மியமான குளிர் கலந்த அமைதிச் சூழலில்…!குவைத்துக்கு குறுகிய கால விஜயமாக னுச. அப்துல்லாஹ்-வாக வந்திருக்கும் அந்த முன்னாள் பெரியார்தாசன், தொடர்ந்த விமானப் பயணங்கள் தந்த அசதி,பெரியார்தாசனாக தன்னை முன்பு குவைத்தில் வரவேற்ற சுற்றமும் நட்பும், தற்போது னுச. அப்துல்லாஹ்-வாகி அதே குவைத்தில் கால் பதித்தபோது புறக்கணிப்பை வரவேற்பாக அளித்த மனபாதிப்பு,சுறுசுறுப்பான இறுக்கமான பணிச்சூழல்கள் இவற்றுக்கிடையேயும் வெளிநாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளிலேயே, முதன்முறையாக வசந்தம் பத்திரிகைக்காக ஆசிரியர் மு.அ.அப்துல் முஸவ்விர் அவர்களுக்கு ஒரு நீண்ட பேட்டியை வழங்கினார்.., அவருடனான நேர்காணலிலிருந்து… வசந்தம் வாசகர்களுக்காக..!
உங்களைப் பற்றிய ஒரு சுருக்க சுயஅறிமுகம் தாருங்களேன்…!
சேஷாசலம் என்பது என் இயற்பெயர்.மனோதத்துவ துறையில் கலாநிதி –டாக்டர் பட்டம் பெற்று,சென்னையின் புகழ் பெற்ற பச்சையப்பன் கல்லூரியில் மனோதத்துவப் பாடப் பேராசிரியராக பணியாற்றி 2006-இல் ஓய்வு பெற்றேன்.தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன்.இது தவிர, மனநோய்க்கு தனியாக சிகிச்சையும் அளித்து வருகி;ன்றேன்.இது எனது தொழில்!             குடும்பத்தை எடுத்துக் கொண்டால், நான் ஒரு இந்து பெற்றோருக்கு பிறந்தவன். உடன்பிறந்தவர்கள் எவரும் அதிகம் படிக்கவில்லை என்றாலும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த என் தந்தை என்னை நன்கு படிக்க வைத்தார்.நானும் அவர் உழைப்பை வீணாக்காமல் நன்கு படித்து முன்னேறினேன்.       
தொடரும்                                       
1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

அவளுக்கென்று ஒரு தினம்..! அவளுக்காக இல்லை ஒரு தினம்..!!

1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

-மு.அ. அப்துல் முஸவ்விர்

மார்ச் 8! சர்வதேச மகளிர் தினம்! 1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!சற்று பின்னே பயணிப்போம்! 1996-ஆம் ஆண்டு தேவே கவுடா, பாரதப் பிரதமராக இருந்தபோது, முதன் முதலில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியாமற் முடக்கப்ட்டது. பின்னர், 1998,1999,2002,2003,2008 என்று பல முறை
மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்

ஹிஜாப் :எம் மாதர் அடையாளம்..!

மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்

மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்

ஃபிப்ரவரி 1:சர்வதேச ஹிஜாப் தினம்
(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்.  மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும்.
திருக் குர்ஆன் 24: 30,31
இன்று சர்வதேச அரபிமொழி தினம்..!

இன்று சர்வதேச அரபிமொழி தினம்..!

இன்று சர்வதேச அரபிமொழி தினம்

இன்று சர்வதேச அரபிமொழி தினம்

டிஸம்பர் 18:இன்று சர்வதேச அரபிமொழி தினம்..!அரபு எழுத்துகள் அல்லது அரபு அரிச்சுவடி என்பது அப்ஜதிய்யா அரபிய்யா என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்துமுறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எழுத்துமுறை உலகில் இரண்டாம் மிகப் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை ஆகும்.[1] முதலாக அரபு மொழியை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் விரிந்து அச்சமயத்தின் தாக்கம் காரணமாக இஸ்லாம் உலகில் பல்வேறு மொழிகளின் பேசுவோர் அரபு எழுத்துமுறையை பின்பற்றியுள்ளனர். அரபு மொழி சேர்ந்த செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேராத பாரசீகம், உருது, ஹவுசா, பாஷ்தூ, மலாய், பிராகுயி, சிந்தி போன்ற மொழிகளை பேசுவோர் சிறிய மாற்றங்களை செய்து இந்த எழுத்துமுறையை தனது தாய்மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்தியுள்ளன.

இந்த எழுத்துமுறை முதலில் அரபு மொழி நூல்களையும், அதுவும் குறிப்பாக திருக் குர்ஆனையும், எழுதப் பயன்படுகிறது. பின்னர் இசுலாம் மதம் பரவிய பின்னர் பல மொழிக்குடும்பங்களில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்களையும் எழுதப் பயன்பட்டது. இம்மொழிகளில் பாரசீக மொழி, உருது, பஷ்து (Pashto), பலோச்சி (Baloch), மலாய், கிசுவாகிலி, பிராகுயி, காசுமீரி, சிந்தி, பால்ட்டி, பாக்கிஸ்தானிய பஞ்சாபி, சீனாவின் சிஞ்சியாங் மாநிலத்தில் பேசப்படுகின்ற உய்குர், கசக், உசுபெக்கு, இலங்கை, தென்னிந்தியா மற்றும் சில நாடுகளிலுள்ள அர்வி, ஆப்பிரிக்காவில் மாண்டிங்கா, ஃவுல்ஃவ்வுல்டி-புலார், ஔசா முதலியவும், குர்திசுத்தான், பெலாரூசியன் தார்த்தார், கிர்கிசுத்தான், உதுமானிய துருக்கியம், போசினியாவில் செர்போ-குரோசியம், இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் உள்ள ஆச்சே மொழி ஆகிய நில-இன மக்கள் பேசும் மொழிகள் உட்பட வேறு பல மொழிகளும் அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.

அரபு எழுத்துகள் மொத்தம் 28. ஆனால் அவை முதலெழுத்தாகவும், சொல்லின் இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது வடிவங்கள் மாறுபடுகின்றன. அரபு எழுத்து முறையைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகின்றது. அரபு வலமிருந்து இடமாகப் படிக்கும் மொழி. ஆகவே முதல் எழுத்து என்பது வலது கோடியில் உள்ளது. கடைசி எழுத்து என்பது இடது கோடியில் உள்ளது. வேறு மொழிகளில் கூடுதலாக சில எழுத்துகள் உள்ளன. உயிரெழுத்துகளை கட்டாயமாக எழுத வேண்டம் என்பதால் அரபு எழுத்துமுறை ஒரு அப்ஜத் வகை எழுத்துமுறையாக பிரிந்து கொண்டு இருக்கிறது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து…!

இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது!

இறுமாப்பின் எச்சம்…!இணை வைப்பின் மிச்சம்..!!

-மு.அ.அப்துல் முஸவ்விர்
இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது!

இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது!

றை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே! இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே! இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது! இணைவைப்பு எனும்போது ஏகஇறைவனான அல்லாஹ்வை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து கற்கள்,சிலைகள்,மரங்கள்,சித்திரங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற போலி கடவுளரையும் நம்புவதையும் வணங்கி வழிபடுவதையும்,அவற்றிடம் உதவி கேட்பதையும் குறிக்கின்றது. உண்மையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிறக்கின்றது.ஏனெனில்,ஏகத்துவத்தை இயல்பிலேயே குடியமர்த்தித்தான் மனிதனைப் படைக்கின்றான் அல்லாஹ்!ஏகத்துவக் கோட்பாடானது இயற்கையின் கோட்பாடே அன்றி வேறில்லை! இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ, அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள்!அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய மடியாது! திருக் குர்ஆன் 30:30 எனவே, இயல்பிலே மனிதன் சுமந்து வரும் கொள்கையோடு அவனை விட்டுவிட்டால் அவன் ஏகத்துவவாதியாகவே வளர்ந்து வாழ முடிகின்றது.ஆனால், பிறக்கும்போது சுமந்து வந்த கொள்கை, பிறந்த பின்னர் அவனுடைய சூழலாலும்,பெற்றோராலும் மாற்றப்பட்டு வௌ;வேறு கொள்கைகள் ஊட்டப்படுவதன் காரணமாகவே ஒரு மனிதன் திசை மாறிச் செல்கின்றான்.இதனை இறைவனின் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது பொன்மொழியில் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னார்கள்:- ‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை கொள்கையான ஏகத்துவக் கொள்கையுடனேயே பிறக்கின்றது.ஆனால், அதனை ஒரு யூதனாகவோ,கிறித்தவராகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுவது அதன் பெற்றோர்களே!’ ஆதாரம்: புகாரி,முஸ்லிம் எனவே, சுயமாக சுமந்து வரும் கொள்கையை ஏதேச்சையாக மாற்றி வேறாரு கொள்கையை திணிப்பது அநீதியின்றி வேறென்ன?எனவேதான், சர்வலோக இரட்சகனான அல்லாஹ் இணைவைத்தல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேலும், (அறிஞர்) லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்:’என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே!’உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்!’ திருக் குர்ஆன் 31:13 ஏன குறிப்பிடுகின்றான். இவ்வாறு இணை வைப்பவனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மனிதன் செய்யக்கூடிய பாவங்களை அவன் பாவமன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் றாடினால் மன்னித்துவிடுவான். ஆனால், அந்த அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு பிரகடனப்படுத்துகின்றான்:-திண்ணமாக தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை.இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுவான்’ திருக் குர்ஆன் 4:48
மனிதம் மதிப்போம்..!இன்று சர்வதேச ஆடவர் தினம்..! உண்மையான ஆண்மைத்தனம் ஆதிக்கத் தோரணையில் இல்லை..!இறைநம்பிக்கையின் உன்னத தாத்பர்யத்தில்.., அழகிய ஆளுமையில்..., தன்னம்பிக்கைத் திடலில்.., அன்பின் ஆர்ப்பரிப்பில்.., மகளிரின் மதிப்பில்..,

இன்று சர்வதேச ஆடவர் தினம்..!

மனிதம் மதிப்போம்..!இன்று சர்வதேச ஆடவர் தினம்..! உண்மையான ஆண்மைத்தனம் ஆதிக்கத் தோரணையில் இல்லை..!இறைநம்பிக்கையின் உன்னத தாத்பர்யத்தில்.., அழகிய ஆளுமையில்..., தன்னம்பிக்கைத் திடலில்.., அன்பின் ஆர்ப்பரிப்பில்.., மகளிரின் மதிப்பில்..,

மனிதம் மதிப்போம்..!இன்று சர்வதேச ஆடவர் தினம்..! உண்மையான ஆண்மைத்தனம் ஆதிக்கத் தோரணையில் இல்லை..!இறைநம்பிக்கையின் உன்னத தாத்பர்யத்தில்.., அழகிய ஆளுமையில்…, தன்னம்பிக்கைத் திடலில்.., அன்பின் ஆர்ப்பரிப்பில்.., மகளிரின் மதிப்பில்..,

மனிதம் மதிப்போம்..!இன்று சர்வதேச ஆடவர் தினம்..! உண்மையான ஆண்மைத்தனம் ஆதிக்கத் தோரணையில் இல்லை..!இறைநம்பிக்கையின் உன்னத தாத்பர்யத்தில்.., அழகிய ஆளுமையில்…, தன்னம்பிக்கைத் திடலில்.., அன்பின் ஆர்ப்பரிப்பில்.., மகளிரின் மதிப்பில்.., மழலையின் மாசு மருவில்லா மரியாதையில்.., அனைத்துக்கும் மேலாக இறுதித்தூதரின் முன்மாதிரி வாழ்வை வலிந்து சென்று வரவேற்பதில்.. உள்ளது..!

வெறுமனே அழைப்பிதழ்களில் போடுவதற்கும்..,

புலம் பெயர்தலின் புனித வரலாறு!

வெறுமனே அழைப்பிதழ்களில் போடுவதற்கும்.., பீடை மாதம் உள்ளிட்ட அநாச்சார வகையிலான
ஹிஜ்ரத் படிப்பினைகள்:

ஹிஜ்ரத் படிப்பினைகள்:

மூடப்பழக்கங்களை வெளிப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய புத்தாண்டின் மகத்துவம் என்ன..? புலம்பெயர்தலின் உன்னத வெளிப்பாட்டை படம் பிடித்துக் காட்டும் இந்த வரலாற்று நிகழ்வை அறிவது மிக முக்கியம்!
ஹிஜ்ரத் படிப்பினைகள்:
ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் ‘ஹி’ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.
Continue reading

மகளே..!மகளே..!!

மகளே..!மகளே..!!

மகளே..!மகளே..!!

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்..

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

Continue reading