விருந்து
வானவர்கள் சிலர் என்னிடம் வந்து, 'இவருக்கு உதாரணம் கூறுங்கள்' என்று தமக்கிடையில்கேட்டுக்கொண்டார்கள்.ஒருவர் ஒரு வீட்டைக் கட்டி அதில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்துக்கு அழைக்கவும் ஒருவரை அனுப்பிவைக்கிறார். யார் அந்த அழைப்பை ஏற்றார்களோ, அவர்கள்
அவ்வீட்டில் நுழைந்து விருந்து உண்பார்கள். யார் அழைப்பை ஏற்கவில்லையோ அவர்கள்
வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். விருந்தும் உண்ணமாட்டார்கள். இதுவே இவருக்கு
உதாரணமாகும் என்று கூறினார்கள். வீடு என்பது சுவர்க்கமாகும். அழைக்கச் சென்றவர்
முஹம்மத் (ஸல்) அவர்களாவார் என வானவர்கள் விளக்கம் அளித்தனர் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளார்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி
யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு
செய்து விட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும்
விருந்துகளில் கலந்த கொள்ளவேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி
செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான்
விருந்துகளில் மிகக் கெட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
