நபி (ஸல்) அவர்கள் பிற மதத்தவர்ளுடன் கடைப்பிடித்த உளவியல் பாங்கும் மனித நேயமும்

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் எனும் பகுதிக்கு சிறு படையை அனுப்பினார்கள். அப்படையினர் பனு ஹனிபா சமுதாயத்தைச் சேர்ந்த ஸ¤மாமா என்பவரை பிடிக்க வந்தனர்.
அவரைப் பள்ளிவாசலின் ஒரு தூணில் கட்டிவைத்தனர். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து ஸ¤மாமாவே உம்மிடம் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கவர் முஹம்மதே என்னிடம் செல்வம் இருக்கிறது. என்னை நீங்கள் கொன்றால் கொல்லப்படுவதற்கு தகுதியானவனையே நீங்கள் கொன்றவராவீர்கள்.
நீங்கள் அருள் புரிந்தால் நன்றியுடன் நடப்பவனுக்கு அருள் புரிந்தவராவீர்கள் என்று கூறினார். அவரை அப்படியே விட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். மறுநாள் அவரிடம் வந்து முதல் நாள் கேட்டது போல் கேட்டார். அவரும் அவர்களும் முதல்நாள் கூறிய பதிலையே கூறினார்கள்.
மூன்றாம் நாளும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள் முதல் நாள் கேட்டது போலவே கேட்டார். அவரும் முதல் நாள் கூறிய பதிலையே கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸ¤மாமாவை அவிழ்த்துவிடுங்கள் என்றார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பேரீச்சம் மரத் தோப்புக்குள் சென்று குளித்துவிட்டு பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று நான் கூறுகிறேன்.
முஹம்மதே இவ்வுலகில் உங்கள் முகத்தைவிட எனக்கு வெறுப்பான முகம் ஏதும் இருந்ததில்லை இன்று உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த முகமாக உங்கள் முகம் மாறிவிட்டத. உங்கள் மார்க்கத்தைவிட எனக்கு வெறுப்பான மார்க்கம் ஏதும் இருக்கவில்லை. இன்று உங்கள் மார்க்கம் உலகிலேயே எனக்குப் பிடித்த மார்க்கமாக மாறிவிட்டது. உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் ஏதும் இருந்ததில்லை இன்றோ உலகிலேயே எனக்குப் பிடித்த ஊராக உங்கள் ஊர் மாறிவிட்டது.
உங்கள் படையினர் என்னைப் பிடித்துவந்துவிட்டனர். நான் மக்கா சென்று உம்மராவை நிறைவேற்ற நினைக்கிறேன். நீங்கள் என்ன கூறுகிaர்கள் என்று கேட்டார்’ அவருக்கு நபி (ஸல்) அவர்கள் வாழ்த்துக் கூறி உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சொன்னார்கள். அவர் மக்காவுக்கு வந்ததும் ‘நீரும் மதம் மாறிவிட்டீரா?’ என்று மக்காவாசிகள் கேட்டனர். இல்லை, முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நானும் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் அனுமதியின்றியமாமாவிலிருந்து ஒரே ஒரு கோதுமை கூட உங்களுக்கு இனிமேல் வராது என்று விடையளித்தார். நூல் : புகாரி – 4372
யமாமா எனும் பகுதியில் அதிகாரம் செலுத்துபவராக ஸ¤மாமா இருந்தார். சிற்றரசாக இருந்த அவரை தான் நபி (ஸல்) அவர்களின் படையினர் பிடித்து வந்தனர். ஏன் பிடித்து வந்தனர் என்ற காரணத்தை இந்த நிகழ்ச்சியில் ஸ¤மாமாவின் வாக்குமூலத்திலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.
என்னை நீங்கள் கொல்வதென முடிவுசெய்தால் அதற்கு நான் தகுதியானவனே என்று அவர் கூறினார்.
கொல்லப்படுவதற்கு தகுதியான பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு எதிராக அவர் நிகழ்த்தியவர் என்பது இதிலிருந்து தெரிகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அவர் செய்த கொடுமைகள் காரணமாகவே அவருக்கு எதிராக படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள்.
பொதுவாக இதுபோன்ற கொடுமை செய்த தலைவர்களும் சிற்றரசர்களும் மன்னிக்கப்படுவது அன்றைய வழக்கத்தில் இருந்ததில்லை. மன்னித்துவிடுவதால் மேலும் பலத்தை பெருக்கிக்கொண்டு போருக்கு வருவார்கள் என்பதால் இவ்வாறு செய்வது அன்று வழக்கத்திலில்லை.
‘என்னைக் கொல்லவும் நியாயம் இருக்கிறது மன்னித்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்’ என்று அவர் கூறுகிறார். அதுவும் வேண்டிய அளவுக்கு பலத்தைப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்தால் போதும் என்பதுதான் அவரது கோரிக்கை.
கொல்லப்படுவதற்கு அத்தனை நியாயங்கள் இருந்தும் அதுவே அன்றைய உலகில் வழக்கமாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கொல்லவில்லை. மூன்று நாட்களாக அவரை விடுவிக்கவும் இல்லை. எடுத்த எடுப்பிலேயே முதல் நாளிலேயே அவரை அவர்கள் விடுவித்திருக்க முடியும். ஆயினும் முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், பண்பாடுகள் அனைத்தையும் அவர் காணவேண்டும் என்பதற்காகவே மூன்று நாட்கள் அவரைப் பள்ளிவாசலிலேயே கைதியாக வைத்தார்கள்.
மூன்றாம் நாளில் அவரிடம் எந்தப் பணத்தையும் கேட்காமலும் எந்த நிபந்தனையும் விதிக்காமலும் எந்த ஒப்பந்தமும் எழுதிக்கொள்ளாமலும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமலும் அவிழ்த்துவிடச் சொல்கிறார்கள்.
உண்மை முஸ்லிம்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் கொள்கைகளையும் அவர்களின் அப்பழுக்கற்ற நேர்மையையும் நேரில் காண்பவர் நிச்சயம் எதிரியாகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் நம்பியதால்தான் பயங்கரமான எதிரியை சர்வசாதாரணமாக அவிழ்த்துவிட்டார்கள்.
