Article

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்..!

images (1)

images 11 150x150 காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்..!

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றையகாதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்தியகலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றையஇளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல்அமைந்திருக்கின்றது.

தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மைதாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின்தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமதுசுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வைஅமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர்சமுதாயம்.

தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாகஅமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும்தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்துபழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவேகாணப்படுகின்றன.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார்கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள்போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமானதடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்குதெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாகதிருமணம் நடந்தேறுகிறது.
தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றையகாதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில்இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்குவகிக்கின்றன.

இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்துநடப்பவை அல்லமாறாக உணர்வுகளின் உந்துதல்களால்நடைபெறுபவை ஆகும்இவ்வாறு நடந்தேறியதிருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள்சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்துவாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்குமுகம் கொடுக்க முடிவதில்லைபரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்துஅற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.

உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய்மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள்அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளேபூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இதுவிவாகரத்தில் சென்று முடிகின்றது.
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும்உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவுஇடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக்குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள்  தற்போதையகாதல் திருமணங்களேயாகும்.
மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்றுதற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின்அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம்  என்பனஇருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள்தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள்போலித்தனமானவையாகும்.

இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான்.தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்துஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில்  காதலனால் கைவிடப்படுகின்றசந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாகபலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கிபயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின்பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.

நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்யார் மலையின் மீதிருந்துகீழே  குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகநெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார்.யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோஅவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில்வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார்யார்கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோஅவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில்தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக்கொண்டேயிருப்பார்.
அறிவிப்பவர்அபூஹுரைரா (ரழிநூல்புஹாரி 5778
இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்துஎம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நியஆண்களும்  பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம்வன்மையாக கண்டிக்கின்றது.

imagesCAGKQLSQ 150x150 காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்..!

கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன்அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களைவிவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள்முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள்சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக்கொள்ளலாம் icon wink காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்..!   அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன்.உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்ஆகவே முஃமினானஅடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதிகொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய(மஹர்தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம்செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும்இருக்க வேண்டும்எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம்முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம்செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும்தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்தசட்டம்எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்குமிகவும் நல்லதாகும்இன்னும் அல்லாஹ்மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும்இருக்கின்றான் ‘.  (அல்குர்ஆன் 4:25)

மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதைதடைசெய்கிறது.
திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்யவிரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்யவிரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம்தாராளமாக அனுமதிக்கின்றதுமாறாக இன்றையகாலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்புமீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.

மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்குபார்த்து நாம் எதிர்பார்க்கும்  விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதாஎன்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம்வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள்பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான்அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ளவிரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள்அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா?  எனக் கேட்டார்கள். அதற்கு அவர்இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார்.அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றதுஎன்றார்கள் ‘.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்
‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன்.இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப்பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின்அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக்கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்படவழிபிறக்கும் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி) நூல்: திர்மிதீ நஸயீ

மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாகஇருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்துகொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம்கேட்கப்பட வேண்டும்.
‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்)அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி5136/ 6968/ 6970

அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பியஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாதுமாறாகபொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டிஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால்பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன்இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்துதிருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின்உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்துகொடுக்க முன் வர வேண்டும்
மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர்விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும்முஸ்லிமாக இருத்தல் வேண்டும்முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம்தடைசெய்கின்றதுமுஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும்விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தைஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.
ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப்பாருங்கள்.
“(அல்லாஹ்வுக்குஇணைவைக்கும் பெண்களை -அவர்கள்நம்பிக்கை கொள்ளும் வரைநீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்;  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக்கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினானஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;.அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்குஅவர்கள் நம்பிக்கைகொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்நீங்கள் திருமணம்செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக்கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினானஅடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய)இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின்பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்மனிதர்கள்படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாகவிளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)
அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கைமார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத்தடுப்பது குற்றமாகும்.
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமதுவாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும்மன்னிப்பையும் பெறுவோமாக.

 

This website its a part of the DA’AWA-FOCUSED NETWORK