14 விடயங்கள் நடந்து விட்டால் கியாம நாளை எதிர்பாருங்கள் !!

1 . பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப் போல் ஆக்கிக் கொள்வார்கள்   2 . அமானிதத்தை தம் பங்குக்கு கிடைத்த பொருளாக ஆக்கிக் கொள்வார்கள் .
3. ஜகாத்தை கொடுக்க மாட்டார்கள் . (கொடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் )
4. மார்க்கக் கல்வியை உலக லாபத்திற்காக கற்பார்கள் .(பதவிக்காகவும் பொருளுக்காகவும் கற்பார்கள் )
5. கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான் .
6. தாயை வேதனைப்படுத்துவான் .
7. நண்பனை அனைத்து விஷயங்களிலும் நெருக்கமாக்கிக் கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவான்.
8. பள்ளிவாசலில் உலக பேச்சுக்கள் அதிகமாகிவிடும்.
9 . பாவச் செயலில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவான்.
10 . இழிநிலையானவன்  முக்கிய்மானவனாகக் கருதப்படுவான் .
11 . அடாவடித் தனத்திற்கு பயந்து அந்த மனிதனுக்கு மரியாதை செய்வார்கள்
12 . ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்கள் , இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.
13 . பலவகையான (பல பெயரில்) மதுபானங்கள் அருந்தப்படும் .
14 . காலத்தால் பிந்தியவன் முந்தைய சமுதாயத்தினரை பழிப்பார்கள்
இந்த நிலைகள் ஏற்பட்டால் அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், மனிதன் உருமாற்றபடுவதையும் , வானத்திலிருந்து கற்கள் எறியப்படுவதையும் எதிர்பாருங்கள் .

அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி )
நூல் :திர்மிதி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *