நாளும் ஓர் இறைவசனம்🌷

நாளும் ஓர் இறைவசனம்🌷

فِيْهِ اٰيٰتٌ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

📖அல்குர்ஆன் : 3:97📖

📚📚📚📚📚📚📚📚📚📚📚

🌹நாளும் ஓர் நபிமொழி🌹

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் குர்பானி கொடுக்கிறவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். ஒருவர் தொழுகைக்கு முன்பே அறுப்பது மாமிசத்திற்காக அறுக்கப்பட்டதாகும்’ என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் சாப்பிட்டு விட்டோம்’ என்றார். அப்போது நபி(ஸல்) ‘அது மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்’ என்று கூறினார்கள். அப்போது அவர் ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் சதைப்பற்றுள்ள இரண்டு ஆடுகளை விடச் சிறந்த, ஆறுமாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?’ என்று கேட்டார். ‘ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது’ என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.

📕ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 983

அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறிய முடியாத விடயங்கள்

 

إنَّ اللَّـهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ

اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ﴿٣٤

நிச்சயமாக அந்த ( கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் க ர் ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான் நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

14 விடயங்கள் நடந்து விட்டால் கியாம நாளை எதிர்பாருங்கள் !!

1 . பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப் போல் ஆக்கிக் கொள்வார்கள்   2 . அமானிதத்தை தம் பங்குக்கு கிடைத்த பொருளாக ஆக்கிக் கொள்வார்கள் .
3. ஜகாத்தை கொடுக்க மாட்டார்கள் . (கொடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் )
4. மார்க்கக் கல்வியை உலக லாபத்திற்காக கற்பார்கள் .(பதவிக்காகவும் பொருளுக்காகவும் கற்பார்கள் )
5. கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான் .
6. தாயை வேதனைப்படுத்துவான் .
7. நண்பனை அனைத்து விஷயங்களிலும் நெருக்கமாக்கிக் கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவான்.
8. பள்ளிவாசலில் உலக பேச்சுக்கள் அதிகமாகிவிடும்.
9 . பாவச் செயலில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவான்.
10 . இழிநிலையானவன்  முக்கிய்மானவனாகக் கருதப்படுவான் .
11 . அடாவடித் தனத்திற்கு பயந்து அந்த மனிதனுக்கு மரியாதை செய்வார்கள்
12 . ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்கள் , இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.
13 . பலவகையான (பல பெயரில்) மதுபானங்கள் அருந்தப்படும் .
14 . காலத்தால் பிந்தியவன் முந்தைய சமுதாயத்தினரை பழிப்பார்கள்
இந்த நிலைகள் ஏற்பட்டால் அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், மனிதன் உருமாற்றபடுவதையும் , வானத்திலிருந்து கற்கள் எறியப்படுவதையும் எதிர்பாருங்கள் .

அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி )
நூல் :திர்மிதி