ஹஜ்ஜுப்பெருநாள் நிகழ்ச்சி

ஹஜ்ஜுப்பெருநாள்  நிகழ்ச்சி

ஹஜ்ஜுப்பெருநாள் விடுமுறையையிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 10/10/2013  மாலை 6.30 மணிக்கு குவைத் அல்-ஜஹ்ரா  ஐ.பீ.சி கிளையில் நடைபெற்ற குவைத் வாழ் இலங்கை இந்திய சகோதர சகோதரிகளுக்காக குடும்ப-தர்பிய்யா நிகழ்ச்சியும்,சிறுவர்களுக்கான  மார்க்க  போட்டி நிகழ்ச்சியும் இனிதாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
3

முன்மாதிரி முஸ்லிம்

முன்மாதிரி முஸ்லிம்மாற்றுபவராக, நேர்மையற்றவராக, மோசடிக்காரராக இருக்கமாட்டார்
முஸ்லிம், நேர்மையற்றவராகவோ மோசடிக்காரராகவோ இருக்கமாட்டார். ஏனெனில் அவர் வாய்மையாளராக இருப்பதால் பிறர் நலம் நாடுவது, மனத்தூய்மை, நீதி, நேர்மை போன்ற நற்பண்புகளையே விரும்புவார். மோசடி, வஞ்சம், நேர்மையின்மை போன்ற குணங்களை விரும்பமாட்டார்.
உண்மை முஸ்லிமின் மனசாட்சி மோசடித்தனத்தைச் சகித்துக் கொள்ளாது. அதிலிருந்து விலகிச் செல்லவே அவரைத் தூண்டும். அக்காரியங்களை செய்தால் இஸ்லாமிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவோம் என அவர் அஞ்சுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் நமக்கு எதிராக வாளை ஏந்துகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர். எவர் நம்மை மோசடி செய்கிறாரோ அவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தின் மற்றொரு அறிவிப்பில் காணப்படுவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஓர் உணவு தானியக் குவியலை கடந்து சென்றபோது தனது கரத்தை அதனுள் நுழைத்தார்கள். தனது விரல்களில் ஈரத்தைக் கண்டபோது ‘‘உணவு தானியத்தின் உரிமையாளரே! இது என்ன?” என்று கேட்டார்கள். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! மழைதான் காரணம்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அந்த ஈரமானதை மக்கள் பார்க்கும் வகையில் மேல் பகுதியில் வைத்திருக்க வேண்டாமா? மோசடித்தனம் செய்பவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
இஸ்லாமிய சமுதாயம் நேசம், பிறர்நலம் பேணுவது என்ற அடிப்படையின் மீது நிர்மாணிக்கப்பட்டதாகும். இஸ்லாம் நேர்மை, உண்மை மற்றும் உபகாரம் செய்வதை தனது உறுப்பினர் மீது விதியாக்கியுள்ளது. அதனால்தான் நன்றி மறப்பவன், ஏமாற்றுக்காரன், வஞ்சகன் போன்றவர்களுக்கு அதில் இடமில்லை.
நபி (ஸல்) அவர்கள் மோசடி செய்பவன் விஷயத்தில் மிகக்கடினமான நிலையைக் கொண்டிருந்தார்கள். அவனை சமுதாயத்திலிருந்து நீக்கிவைப்பதுடன், உலக முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். மேலும், அவன் மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் மறுமை நாளில் தனது மோசடித்தனத்திற்கு அடையாளமாக ஒரு கொடியை கரத்திலேந்தி வருவான். அவனது மோசடித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் மலக்குகள் சப்தமிட்டு அதைக் கூறுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமை நாளில் ஒவ்வொரு மோசடிக்காரனிடமும் ஒரு கொடி இருக்கும், இது அவனது மோசடித்தனம் என அறிவிக்கப்படும்.” (ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அவன், தான் செய்த மோசடித்தனங்கள் கால ஓட்டத்தால் அழிந்திருக்கும் என்று எண்ணியிருக்க, படைப்பினங்கள் அனைவரின் முன்னிலையிலும் மோசடித்தனத்திற்குரிய என்ற கொடியை கையிலேந்தி வருவது எத்தகு அவமானம்?
மோசடிப் பேர்வழிகளின் துரதிஷ்டமும் கவலையும் மறுமை நாளில் அதிகரித்துக்கொண்டே செல்லும். நபி (ஸல்) அவர்கள் ஷஃபாஅத் செய்யும் அந்த அரிய சந்தர்ப்பத்தில் ‘‘அல்லாஹ{ தஆலா அந்த மோசடிக்காரர்களுக்கு எதிராக வாதிடப்போகிறான்” என்று அறிவிக்கப்படும். ஏனெனில், அது அல்லாஹ்வின் அருளைத் தடுத்துவிடும் மாபெரும் குற்றச் செயலாகும். அதனால் மறுமை நாளில் கருணை நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் என்ற மகத்தான பாக்கியத்திலிருந்து அகற்றப்படுவார்கள்.
அல்லாஹ{ தஆலா அருளியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மூன்று நபர்களுடன் நான் மறுமை நாளில் வாதிடுவேன். 1. என் பெயரால் சத்தியம் செய்து பின்பு மோசடி செய்தவன் 2. சுதந்திரமான ஒருவரை அடிமையெனக் கூறி விற்று அவன் கிரயத்தை சாப்பிட்டவன் 3. தனது வேலைக்கு கூலிக்காரரை அமர்த்தி அவரிடம் முழுமையாக வேலை வாங்கிக் கொண்டு அவருக்கு கூலி கொடுக்காதவன்.” (ஸஹீஹ{ல் புகாரி)
முஸ்லிமின் உணர்வுகளை இஸ்லாம் மதிக்கிறது. சிந்தித்து செயல்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்துள்ளது. அவர் பொருளீட்டும்போது பொய், மோசடி, அநீதம் போன்ற குணங்கள் தலைதூக்கிவிடாமல் கவனமாக இருப்பார். அதனால் அவருக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் சரியே. ஏனெனில் இந்த குணங்கள் உடையவனை இஸ்லாம் நயவஞ்சகர்களின் பட்டியலில் சேர்க்கிறது. நயவஞ்சகர்களுக்கு மறுமையில் உதவுவார் ஒருவருமில்லை. அவனுக்கு நரகின் அடித்தளமே நிரந்தரமாக்கப்படும்.
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காண மாட்டீர் (அல்குர்ஆன் 4:145)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவனிடத்தில் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழுமையான நயவஞ்சகனாவான். எவனிடத்தில் அதில் ஏதேனும் ஒன்று இருக்கிறதோ அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒருகுணம் அவனிடத்தில் இருக்கும். 1. அவன்மீது நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான் 2. பேசினால் பொய்யுரைப்பான் 3. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான் 4. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.” (ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)