ஷீஆ பற்றிய ஓர் கண்ணோட்டம்

இஸ்லாமிய வரலாற்றில் சிகப்புப் பக்கங்களை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் ஷீஆ மதத்தைப் பின்பற்றும் வழிகேடர்கள். நபிகள் நாயகம் முதல் நபியின் தோழர்களை குறை கூறி,இகழ்ந்து பேசி,அவதூறுகளை அள்ளி வீசி அவர்களின் வாழ்க்கையின் புனிதத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்க நினைத்த கயவர்கள் தான் இவர்கள்.

தற் காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைத்து தங்கள் மதப் பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள் தற்போது மிகப் பெரிய அளவில் அதனை நடை முறைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

அதன் ஒரு பகுதியாக தற்போது இலங்கைத் திரு நாட்டையும் அவர்களின் கழுகுப் பார்வை எட்டியுள்ளது.

பல வருடங்களாக மந்த நிலையில் நடந்த இந்தப் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கை முஸ்லீம்களின் அரசியல்,ஆன்மீக விஷயங்களில் பல துறைகளிலும் இவர்கள் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இலங்கைக்கு ஷீயாக்கள் ஏன் ஊடுருவியுள்ளார்கள்,அவர்கள் எந்த முறைகளில் இஸ்லாத்தில் இல்லாத காரியங்களை புகுத்துகிறார்கள்,அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாம் விளக்கமாக ஆராய கடமைப் பட்டுள்ளோம் அதன் ஆரம்பமாக முதலாவது ஷீஆக்கள் பற்றிய ஒரு தெளிவை நாம் பார்ப்போம்.

பிரிவினைவாதிகளின் பெயர் விளக்கம் :

ஷீஆ என்பது அணி ,கோஷ்டி,குழு என்ற பொருள்களை கொண்ட ஒரு வார்த்தையாகும்.அரசியல் ரீதியாக பிளவு பட்டு இரண்டு அணிகளாக பிரிந்தவர்களை குறிப்பதற்காகத் தான் இந்த வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டது.

ஆனால் இதுவே கால ஓட்டத்தில் ஒரு வழி கெட்ட பிரிவை இனம் காணும் வார்தையாக மாறிவிட்டது.

ஈரான்,ஈராக் போன்ற நாடுகளில் அதிகமாகவும் இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் குறைவாகவும் தற்காலத்தில் காணப் படும் இவர்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வழி தவறிய கூட்டத்தில் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள்.

வழிகேடர்களின் தோற்றத்தின் பின்னனி :

ஷீஆ என்ற இந்த வழி கெட்ட கூட்டத்தினர் தோன்றியதன் பின்னனியை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிப் பொருப்பை ஏற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக இருப்பவர்கள் அபூபக்கர்,உமர்,உஸ்மான்,அலி,ஹஸன்,முஆவியா(ரலி)ஆகியோர்களாகும்.

அபூபக்கர்(ரலி)அவர்களைத் தொடர்ந்து உமர்(ரலி)அவர்களும்,உமர்(ரலி)அவர்களைத் தொடர்ந்து உஸ்மான்(ரலி)அவர்களும் ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

உஸ்மான் (ரலி)அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த சில அசம்பாவித நிகழ்ச்சியினால் உஸ்மான்(ரலி)அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்ட அலி(ரலி)அவர்கள் உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந் நேரத்தில் சிரியாவின் ஆளுனராக முஆவியா(ரலி)அவர்கள் இருந்தார்கள்.

சிரியாவின் ஆளுனராக இருக்கும் முஆவியா(ரலி)அவர்களிடத்தில் பைஅத் வாங்கிக் கொண்டு அவரையே மீண்டும் சிரியாவின் ஆளுனராக நியமிக்குமாறு இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அலி(ரலி)அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.

அலி(ரலி)அவர்கள் ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலி (ரலி)அவர்களை சிரியாவுக்கு அனுப்பி முஆவியா(ரலி)அவர்களிடம் பைஅத் வேண்டினார்கள்.

ஆனால் முஆவியா(ரலி)அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை.

தனது தந்தையின் சகோதரரின் மகன் உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களை தண்டிக்காத வரை தான் பைஅத் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

அதன் பின்னர் அபூ முஸ்லிம் அல் குராஸானி என்பவரையும் அனுப்பி முஆவியா(ரலி)அவர்கள் தன்னிடம் பைஅத் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் ஆனால் முஆவியா(ரலி)அவர்கள் அதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆட்சியில் கலகக் காரர்களின் கை ஓங்கியுள்ளதையும் ஆட்சியாளரின் கரம் கட்டப் பட்டிருப்பதையும் காரணம் காட்டி உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களை தற்போதைக்கு தண்டிக்க முடியாது என அலி(ரலி)அவர்கள் அந்த விஷயத்தைத் தள்ளி வைத்தார்கள்.

இந்தக் கருத்து வேறுபாடுதான் முஸ்லீம்கள் மத்தியில் இரு குழுக்களை உண்டு பண்ணியது.

அதாவது அலி(ரலி)அவர்களை ஆதரித்து ஒரு பகுதியினரும்,உஸ்மான்(ரலி)அவர்களை ஆதரித்து இன்னொரு பகுதியினருமாக முஸ்லீம்கள் பிளவு பட்டனர்.

இவர்கள் தான் ஷீஅத்து அலி (அலியின் கட்சியினர்),ஷீஅத்து முஆவியா(முஆவியாவின் கட்சியினர்)என வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.

இந்தப் பிரிவினையின் விளைவு ஹிஜ்ரி 36ல் முஹர்ரம் முதல் பத்தில் அலி(ரலி)அவர்களின் தரப்பினருக்கும்,முஆவியா(ரலி)அவர்களின் படையினருக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று வெடித்தது.

முஆவியா(ரலி)அவர்கள் தரப்பால் கலந்து கொண்ட அம்ரு பின் ஆஸ்(ரலி)அவர்கள் இந்த சண்டையை நிருத்தும் விதமாக குர்ஆனைத் தூக்கிக் காட்டுமாறு முஆவியா(ரலி)அவர்களை கேட்டுக் கொள்ள அவ்வாரே முஆவியா(ரலி)தரப்பினரால் குர்ஆன் தூக்கிக் காண்பிக்கப் பட்டது.

இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட அந்த யுத்தம் முடிவுக்கு வந்து,இரண்டு அணியைச் சேர்ந்தவர்களும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். (பத்ஹ{ல் பாரி)

ஷீஅத்து அலி,ஷீஅத்து முஆவியா என்ற இரு அணிகளுக்குமான பெயர் ஒரு அடையாளத்திற்காகத்தான் வைக்கப் பட்டதே தவிர இப்போது இருப்பதைப் போல் மார்க்க ரீதியிலான பிரிவினைக்கு வைக்கப் படவில்லை.

நபியவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை சொல்லி அவர்களை வளர்த்தெடுத்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கையில் அவர்கள் நிலையாக நின்றார்கள் அரசியல் ரீதியாக இரு அணிகளாக மாறினார்கள் அவ்வளவுதான்.

ஆனால் இன்று ஷீஆக்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் அடிப்படையில் இஸ்லாத்தின் மூலாதாரங்களையே மாற்றி ஒரு தனி மதமாக மாறி இஸ்லாத்திற்கு வெளியில் சென்று விட்டார்கள்

அலி(ரலி)அவர்களின் மரணமும்,சமுதாயத்தின் ஒன்றினைவும்.

நான்காம் கலீபா அலி(ரலி)அவர்கள் ஹிஜ்ரி 39களின் நடுப்பகுதியில் இப்னுல் முல்ஜிம் என்பவன் மூலம் கொலை செய்யப் பட்டார்கள்.அலி(ரலி)அவர்களின் மரணத்தின் பின்னர் அவர்களின் மூத்த புதல்வர் ஹஸன்(ரலி)அவர்கள் இஸ்லாமிய அரசின் ஆட்சிப் பொருப்பை கையில் எடுக்கிறார்கள்.

ஹிஜ்ரி 39இன் நடுப்பகுதியில் இருந்து ஹிஜ்ரி 40 வரை ஆட்சி செய்த ஹஸன்(ரலி)அவர்கள்,அலியின் அணி,முஆவியாவின் அணி என்று இரு கூறுகளாக பிரிந்திருந்து மக்களை ஒன்று சேர்க்க நினைத்து தனது ஆட்சிப் பதவியை முஆவியா(ரலி)அவர்களிடம் விட்டுக் கொடுத்து இரண்டு ஆட்சியை ஒரு ஆட்சியாக மாற்றினார்கள்.

ஹஸன் (ரலி)அவர்கள் செய்த இந்த மிகப் பெரும் தியாகத்தை தான் வரலாற்றாசிரியர்கள் ஆமுல் ஜமாஆ – ஒற்றுமையின் ஆண்டு என்று வர்ணிக்கின்றனர்.இந்தச் சந்தோஷமான நிகழ்வை விரும்பாத ஷீஆக்களின் ஒரு பிரிவினர் ஹஸன் (ரலி)அவர்களை மிகப் பெரும் துரோகியாக சித்தரிக்கின்றனர்.

ஷீஆ சிந்தனையின் சொந்தக்காரன்.

தற்கால ஷீஆ சிந்தனையின் சொந்தக் காரணாக இருந்து அதற்கு வித்திட்டவன் இப்னு ஸபா என்பவனாவான்.அலி(ரலி)அவர்களின் காலத்தில் அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த சிந்தனைகளுக்கு இவன் வித்திட்டான்.

இவன் உருவாக்கிய கொள்கையில் மிக முக்கியமானவைகள்.

அலி(ரலி)அவர்கள் மரணிக்கவில்லை அவர்கள் குதிரையில் வானத்திற்கு உயர்த்தப் பட்டார்கள்.

இப்னுல் முல்ஜிமால் அலி(ரலி)அவர்கள் கொல்லப் பட்டும்,அவர்கள் மரணிக்கவில்லை.மாறாக வானுலகுக்கு உயர்த்தப் பட்டுள்ளார்கள்.மீண்டும் உலகுக்கு வருவார்கள் போன்ற வழி கெட்ட மறுபிறவிக் கோட்பாட்டையும் இவன் உருவாக்கினான்.

நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிக்கு பொருப்புச் சாட்டப் பட்ட வஸிய்யாக பொருப்பாளராக அலி(ரலி)அவர்கள் தான் இருக்கிறார்கள்.

அலி(ரலி)அவர்களை ஆட்சியாளராக தெரிவு செய்யாமல் ஸஹாபாக்கள் அனைவரும் அலி(ரலி)அவர்களுக்கு அநீதி இழைத்தார்கள்.

அஹ்லுல் பைத் என்பவர்கள் அலி,பாத்திமா(ரலி)குடும்பத்தினர் மாத்திரம் தான்.
அலி(ரலி)அவர்களுக்கும்,முஆவியா(ரலி)அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை சீர்குலைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப் படுவதற்கும் இவனே காரணமாக இருந்தான்.

இந்த இப்னு ஸபா என்ற வழிகேடன் உருவாக்கிய கேடு கெட்ட சித்தாந்தகங்கள்தான் இன்றுள்ள ஷீஆக்கள் மத்தியில் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

ஷீஆ சிந்தனையின் இமாம்களாக(?)வர்ணிக்கப் படுபவர்கள்.

ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கையின் படி இஸ்லாத்தின் கலீஃபாக்களாக வந்தவர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அந்த நல்லவர்களை துரோகிகளாகத் தான் அவர்கள் சித்தரிக்கிறார்கள்.

இதே நேரம் கலீஃபாக்கள் எப்படி இடம் பெற வேண்டும் என்று அவர்கள் ஒரு வரையறை வைத்துள்ளார்கள் அந்த வரையறையின் படி கிட்டத் தட்ட 12 பேர் இமாம்களாக ஷீஆக்களின் கலீஃபாக்களாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளார்கள் அவர்களில் இஸ்லாத்தின் நான்காம் கலீஃபா அலி(ரலி)அவர்கள்,அவர்களின் இரு புதல்வர்கள் ஹஸன்,ஹ{ஸைன்(ரலி)ஆகிய நபித்தோழர்களும்.

அதைத் தொடர்ந்து அவர்களின் பட்டியலில் இடம் பெரும் மூன்று பேர் ஹதீஸ் அறிவிப்பாளர்களில் நம்பகமானவர்களாகவும்,அறிஞர்களாகவும் போற்றப் படுபவர்களாவர்.

இது தவிர மற்ற சிலரும் இவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள்.அவர்களில் யாருடைய பேச்சிலும்,நடத்தையிலும்,தீர்ப்பிலும் எவ்வித தவறுகளும் நடக்காது என்றும் இவர்கள் அனைவரும் மலக்குகள் நபிமார்களைவிட சிறப்பான தகுதி படைத்தவர்கள் என்றும் இந்த வழி கெட்ட ஷீஆக்கள் நம்புகிறார்கள்.

இதனை ஷீஆக்களின் முக்கியமானவர்களில் ஒருவரான கொமைனியின் இஸ்லாமிய அரசு என்ற புத்தகத்தில் காண முடியும்.

ஷீஆக்களின் இமாம்களின் பட்டியல்.

1.அலீ பின் அபீதாலிப்

2.ஹசன் பின் அலீ

3.ஹ{ஸைன் பின் அலீ

4.அலீ பின் ஹ{ஸைன்.

5.முஹம்மத் அலி.

6.ஜஃபர் பின் முஹம்மத்.

7.மூஸா பின் ஜஃபர்.

8.அபுல் ஹஸன் அலீ பின் மூஸா.

9.அபூ ஜஃபர் முஹம்மத் பின் அலீ.

10.அபூ ஹஸன் அலீ பின் முஹம்மத்.

11.அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அலீ.

12.அபுல் காஸிம் முஹம்மத் பின் அல்ஹஸன்.(அல் மஹ்தி)

மேற்கண்டவர்களே ஷீஆ மதத்தினரின் கொள்கைப் படி அமைய வேண்டிய கலீபாக்கள் இவர்கள் அல்லாத கலீபாக்கள் அனைவரும் அவர்களின் கருத்துப் படி வழி தவறியவர்கள்.

மேற்கண்ட 12 பேரில இறுதியாக வருபவராக நம்பப்படும் அபுல் காஸிம் முஹம்மத் பின் அல் ஹஸன் என்பவர் ஹிஜ்ரி 256இல் சிறுவனாக இருக்கும் போது மரணமடைந்ததாக வாதிடும் ஷீஆ மதத்தினர்,இவர் தற்போது வரை மறைந்து வாழ்வதாக நம்புகிறார்கள்.இவர்தான் மஹ்தி என்று ஷீஆக்களால் அழைக்கப் படுகிறார்.

ஷீஆ மதத்தினரின் மிக முக்கிய கொள்கைகள்.

நபி(ஸல்)அவர்களின் மரணத்தின் பின்னால் அலி(ரலி)அவர்களும்,மேலே நாம் சுட்டிக் காட்டிய ஷீஆக்களின் 12 இமாம்களுமே ஆட்சிக்குத் தகுதியானவர்கள்.மேற்கண்ட 12 பேர் அல்லாத யாரும் ஆட்சிக்கு தகுதியே இல்லாதவர்கள்.

நபியின் மரணத்திற்குப் பின் அலி(ரலி)அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆட்சிப் பொருப்பை அபூ பக்கர்,உமர்(ரலி)போன்றவர்கள் தந்திரமாக தமதாக்கினார்கள்.

அலி(ரலி)அவர்களின் ஆட்சியை தொடர்பு படுத்தி திருக்குர்ஆனில் இரங்கிய அல்விலாயா,அந்நூரைன் போன்ற இரண்டு அத்தியாயங்களையும்,நபித்தோழர்கள் திருக்குர்ஆனை ஒன்று சேர்க்கும் போது வேண்டுமென்றே குர்ஆனில் சேர்க்கவில்லை என்று கூறி குர்ஆனுக்கு பங்கம் விளைவிப்பது.

குர்ஆனில் பதினேலாயிரம் வசனங்கள் இருப்பதாக வாதிடுதல்.

தாம் வைத்துக் கொண்டிருக்கும் குர்ஆன் (முஸ்ஹபு பாத்திமா)தான் உண்மையானது என்றும் உண்மையான முஸ்லீம்கள் உலகம் பூராகவும் பயண்படுத்தும் குர்ஆன் மூன்றில் ஒரு பகுதிதான் என்றும் கூறி குர்ஆனையே சந்தேகப்பட வைத்தல்.

இவையனைத்தும் ஷீஆக்களின் அல்காபி,பஸ்லுல் கிதாப் போன்ற புத்தகங்களில் பதியப் பட்டுள்ளது.

நபியவர்களின் மனைவியர்கள் நபியின் குடும்பத்தில் இடம் பெறமாட்டார்கள் என்ற பிரச்சாரம்.

அலி(ரலி)அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது.அவர்களிடம் மிகப் பெரும் அறிவுப் பொக்கிஷங்கள் எல்லாம் இருந்தன அவைகள் பற்றி எந்த நபித் தோழருக்கும் தெரியாது.

அலி,ஹஸன்,ஹ{ஸைன்,மிக்தாத்,அம்மார்,சல்மானுல்பார்சி,
சுகைப்,பாத்திமா(ரலி)அவர்கள் உட்பட இன்னும் சில நபித் தோழர்களைத் தவிர மற்ற அனைவரும் மதம் மாறிவிட்டார்கள் என்று போதனை செய்தல்.

அலி(ரலி)அவர்கள்,அபூபக்கர்(ரலி)அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்ததாக பிரச்சாரம் செய்வது.

முஃமின்களின் அன்னை ஆயிஷா(ரலி)அவர்களை நடத்தை கெட்டவர்களாக இன்றைக்கும் சித்தரித்தல்.

நபித் தோழர்கள் காபிர்கள்,அசுத்தமானவர்கள் என்று தீர்ப்பு சொல்வது.

உண்மை சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்களையும் காபிர்கள் என்று கூறுதல்.

ஷீஆ மதத் தலைவனான அலி சிஸ்தானி என்பவனின் கருத்துப்படி கஃபாவை தவாப் செய்யும் போது சன்னி முஸ்லிம் ஒருவர் ஷீஆ மதத்தை சேர்ந்தவர்களின் மேல் பட்டுவிட்டால் அந்த ஷீஆ உலூ செய்ய வேண்டும்.

ஷீஆக்களின் இமாமான அல் அஷ்கரீ என்பவர் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்வதாகவும் அவர் என்றோ ஒரு நாள் இந்த உலகுக்கு வெளிப்படுவார் என்று நம்புவது.இதற்கு அல் கைபா என்று சொல்லப் படுகிறது.

தக்கி(ய்)யா என்ற நயவஞ்சகக் கொள்கை.வெளிப்படையில் முஸ்லீம்களாகவும் உண்மையில் ஷீயாக்களாகவும் இருப்பது தக்கியா என்று சொல்லப் படும்.

கர்பலாவை தருசிப்பது மக்கா சென்று கஃபாவை தருசிப்பதை விட சிறந்தது என்று போதித்தல்.

முத்ஆ என்ற தற்காலிகத் திருமணம். ஒரு பெண்ணை ஆறு மாதம்,ஒரு வருடம் என்று ஒப்பந்தம் போட்டு திருமணம் முடித்தல்.

அல்பதாஆ என்ற அல்லாஹ்வின் அறிவில் குறை உள்ளதாக நம்பும் தீய நம்பிக்கை.ஒரு செயல் நடந்து முடிந்த பின்தான் அல்லாஹ்வுக்குத் தெரியும் அதற்கு முன் இறைவனுக்குத் தெரியாது என்று நம்புதல்.

குர்ஆனில் மாற்றப் பட்ட வசனங்கள் தொடர்பாக அது பற்றிய ஆரம்ப அறிவு இறைவனுக்கு கிடையாது என்று நம்புதல்

முஹர்ரம் முதல் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டித்தல்.

ஆஷ{ரா நோன்பை நோட்காமல் தாமும் தமது சிறு குழந்தைகளின் மேனிகளிலும்,முகங்களிலும் இரும்புக் கம்பிகளால் தாக்கி இரத்தக் காயங்களை ஏற்படுத்துதல்.

முஹர்ரம் மாதத்தில் கர்பலாவில் ஹ{ஸைன்(ரலி)அவர்களின் பெயரால் மண்ணரை போன்ற உருவத்தை தயாரித்து,அலங்காரப் படுத்தி துக்கம் அனுஷ்டித்தல்.

கர்பலா நிகழ்ச்சி நடக்கும் காலங்களில் பெண்கள் தமது ஆபரணங்கள் எதையும் அணியமாட்டார்கள்.அது போல் தங்களை அலங்காரப் படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

ஷீயாக் கொள்கையும்,அதன் உட்பிரிவுகளும்.

ஷீயாக்களில் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாரள்கள் குறிப்பிடுகிறார்கள்.அதில் 4 பிரிவுகள் மிக முக்கியமான பிரிவுகளாக பிரித்து நோக்கப் படுகிறார்கள்.

1.அஸ்ஸபபிய்யா.

2.அஸ்ஸைதிய்யா.

3.அல்கைஸானிய்யா.

4.அர்ராபிழா.

அஸ் ஸபபிய்யா :

இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது ‘அர்ரஜ்இய்யா’ வாகும்.
(அல் மிலல் வன்னிஹல் பாகம் 1 பக்கம் 146)

உட்பிரிவுகள்.

அல்குராபிய்யா (காகம்): الغرابية

அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் – சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)

அன்னமிரிய்யா:

முஹம்மத், அலி, பாதிமா, ஹஸன், ஹ{ஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)

அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள நடித்தான்.

இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை தாரீகுத் தபரி, அல்பிதாயா வன்னிஹாயா, மீஸானுல் இஃதிதால், லிஸானுல் மீஸான், தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ‘ஷீஆ’ இயக்கம்

உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள் மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் ‘ஷீஆ’ இயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என Pழணல போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அஸ்ஸைதிய்யா: الزيدية

அலி → {ஹஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸைதிய்யாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸைத் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப் போக்குக் காணப்பட்டது. அதனால் மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு ஆற்றல் ஆளுமை நற்பண்புகள் என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.

இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர் முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியான வாஸில் பின் அதா அபூ ஹனீபா போன்றோரிடமும் கல்வி கற்றுள்ளார். இதனால் இக்குழுவினர் அடிப்படை விஷயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் மற்ற விஷயங்களில் ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.

ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை கர்பலாவில் ஹ{ஸைன் (ரழி) அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தி இக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.

உட்பிரிவுகள்:

ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர் இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.

மூத்தோர்கள்:

இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியை இவர்கள் அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது யெமன் நாட்டில் வாழ்கிறார்கள்.

இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் ஸ{லைமானிய்யா, ஜாரூதிய்யா, ஸாலிஹிய்யா என்ற பெயர்களில் மூன்று பிரிவினராக பிரிந்து வாழ்கிறார்கள்.
(அல்மிலல் வந்நிஹல் பாகம் 1இ பக்கம் 155)

பின் வந்தோர்கள் :

இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் ‘காபிர்’கள் என்கின்றனர்.

கொள்கைகள்.

இமாம்கள் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள்.

பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர்.

அல்லாஹ்வின் அறிவு: ஒவ்வொரு விடயமும் அது நடக்கும் போதுதான் அவனுக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இது ஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும் கைஸானியாக்களினதும் கருத்திலிருந்து உருவானதாகும்;.
(ஸெய்தின் கொள்கை இதற்கு மாற்றமானதாகும்.)

நன்றி :சத்தியம் வந்தது…………….