ஸம்ஸம் நீரின் மகத்துவம்
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தன் மேன்மைக்குரிய மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் மனைவி ஹாஜரா அவர்களையும் இறைவனின் கட்டளைகிணங்க ஜன சஞ்சாரமற்ற பாலைவன பிரதேசமான மக்காவில் தன்னத்தனியே விட்டுவிட்டு திருப்பினார். அவர்களிடமிருந்த நீரும் பேரிதங்கனிகளும் தீர்ந்து போகவே குழந்தை இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் பசியால் அழுது கொண்டிருந்தார். ஹாஜரா அவர்கள் எங்கேனும் தண்ணீர் கிடைக்காத என ஏக்கத்தித்தில் ஸபா மலைக்கும் மர்வா மலைக்குமாக ஓடினார்கள்.அவ்வேளை அல்லாஹ் தனது அருளினால் பசியையும் தாகத்தையும் போக்கும் மகத்துவமிக்க ஸம்ஸம் ஊற்றை அவ்விருவருக்காக தோன்ற செய்தான்.அக்காலம் தொட்டு இன்று வரை [...]