பெண் அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கலந்ததுவே! அவளின் பரந்த மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!தனது சிறந்த குணங்களின் இமாலய எண்ணங்களால்இ பெண்ணாணவள்இ அனைத்துவித இலட்சியங்களையூம் அடைந்து கொள்வாள். அதிலும் இறைவனுடன் தொடர்பு கொண்ட ஒரு உண்மை உள்ளம்..இ இறைநேசத்தின்பால் வாழும் இறையச்சமிக்க ஒரு உள்ளம் கொண்டவளோ உலகத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டவள்!ஆம்! இயற்கையாக அவளை சூழும் துன்ப நோய்களையூம் கூடவே!
வளைகுடா நாடுகளுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரும் அளவில் தொடர்புண்டு என்பது பலரும் அறிந்த உண்மை! வறுமைக்கும் துன்ப துயரங்களுக்கும் அவர்களின் கடல் கடந்த பயணம்!அப்போது தன் தாராள மனதினால் தன்னால் பிரிக்க முடியா அன்பையூம் நேசத்தையூம் உறவையூம் அவர்கள் தாங்கி தன் பொறுப்பானவர்களின் அவர்களின் எதிர் கால வெளிச்சத்திற்கு தன்னை மெழுகுவர்த்தியாக்குவாள்!
பெண்ணின் ஆளுமையை மென்மேலும் மேன்மைப்படுத்தும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அலசலிது.



